Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

4 பொருள் கொண்ட பேஸ்டை மூல பவுத்திர கட்டிகள் மீது பூசினால்.. ஒரே நாளில் குணமாகும் அதிசயம் தெரியுமா?

பெருங்குடல் மற்றும் ஆசனவாய் தோல் இடையே உருவாகும் கட்டியை தான் மூல பவுத்திர கட்டிகள் என்கிறோம்.இந்த மூல பவுத்திர கட்டிகளை வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு எளிதில் குணப்படுத்திக் கொள்ளும் வழிகள் இங்கு தரப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

1)மஞ்சள் இலை – சிறிதளவு
2)வேளைக்கீரை – சிறிதளவு
3)தும்பை வேர் – கால் கைப்பிடி
4)சின்ன வெங்காயம் – இரண்டு

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் மஞ்சள் கிழங்கு செடியின் இலை ஒன்றை எடுத்து தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

பிறகு சிறிதளவு வேளைக்கீரை மற்றும் தும்பை வேரை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

பின்னர் இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 04:

அடுத்து மஞ்சள் கிழங்கு இலை,வேளைக்கீரை மற்றும் தும்பை வேரை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 05:

பிறகு இதை மூல பவுத்திர கட்டிகள் மீது அப்ளை செய்து ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கழித்து காட்டன் துணி அல்லது பஞ்சு கொண்டு அவ்விடத்தை ததுடைக்க வேண்டும்.இதை தினமும் ஒருமுறை செய்து வந்தால் விரைவில் மூலம் பவுத்திர கட்டிகள் ஆறிவிடும்.

மூல பவுத்திர கட்டிகளை குணப்படுத்தும் மூலிகை பானம் செய்முறை விளக்கம்:

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் இருந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 02:

பிறகு ஒரு தேக்கரண்டி அளவு ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 03:

பிறகு பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை அதில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.எலுமிச்சை விதை இருந்தால் அப்புறப்படுத்திவிடுங்கள்.

ஸ்டெப் 04:

பிறகு இதில் ஒரு கிளாஸ் அளவு வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து பருகுங்கள்.இப்படி செய்தால் ஒரு சில மணி நேரத்தில் பெருங்குடலில் தேங்கிய மலக் கழிவுகள் முழுவதும் அடித்துக் கொண்டு வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)கடுக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் கடுக்காய் பொடி 50 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 02:

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கடுக்காய் பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்து பருகினால் பெருங்குடலில் உள்ள கழிவுகள் முற்றிலும் வெளியேறும்.

Exit mobile version