Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது என்று சொல்வதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?

ஜூன் 21 ஞாயிற்றுக் கிழமை அன்று நிகழவிருக்கும் சூரிய கிரகணம் கிட்டத்தட்ட 6 மணி நேரம் வரை நீடிக்கும்என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.இந்திய நேரப்படி காலை 9.15 மணிக்கு தொடங்கி மதியம் 12.10மணிக்கு சூரிய கிரகணம் உச்சமடையும் மேலும் மதியம் 3.02 மணிக்கு கிரகணம் முடிவடையும்.இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதல் நீண்ட கிரகணம் ஆகும். இந்தமுறை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த கிரகமானது தெரியும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது உணவு உண்ணக்கூடாது என்று கூறுவதற்கான காரணங்கள்?

கிரகணம் என்பது பூமியின் நேர்கோட்டில் சந்திரனும் சூரியனும் வருவதே ஆகும்.சூரிய கிரகணத்தின் போது புற ஊதாக் கதிர்களின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்.இந்தக் கதிர்கள் கர்ப்பிணி பெண்களின் மீது அதிகமாக பட்டால் பிறக்க இருக்கும் குழந்தையை பாதிக்கும் என்பதற்காகவே கர்ப்பிணி பெண்கள் வெளியே வரகூடாது என்று கூறுகின்றன.

கிரகணம் தொடங்கும் நேரத்தில் உணவு சமைக்க கூடாது ,உணவு உண்ணக்கூடாது அவ்வாறு சமைத்தால் சமைத்த உணவை மண்ணில் தோன்றி கொட்டிவிட வேண்டும் என்றெல்லாம் கூறுவர்.இதற்கு மிக முக்கிய காரணம் இந்த புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தான்.கிரகணத்தின் போது உணவுப் பொருட்களும் கதிர்வீச்சின் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கும் எனவே தான் கிரகண நேரத்தின் போது சமைக்கக் கூடாது என்று கூறுவர்.இதேபோன்று அந்நேரத்தில் உணவு உண்ணக் கூடாது என்று சொல்வதற்கு காரணம் அஜீரண கோளாறுகள் ஏற்படும் என்பதற்காக.கிரகணம் முடிந்த உடனே குளிப்பதற்கான காரணமும் இந்த கதிர்வீச்சின் தாக்கம் நமது உடலில் இருக்கும் என்பதற்காக.

சில உணவு பொருட்கள் வைத்துள்ள பொருட்களின் மேற்பரப்பின் மீதும், தண்ணீர் வைத்துள்ள பொருட்களின் மேல்பரப்பின் மீதும் தர்ப்பை புல்லை அதன்மீது போட்டுவைத்தால் இந்த கதிர்வீச்சின் தாக்கம் உணவுப்பொருட்களின் மீதுபடுவது குறையக்கூடும்.
தர்ப்பைப்புல்லிருக்கு புற ஊதாக் கதிர்களை உட்கிரகிக்கும் சக்தி உண்டு.

கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது என்று சொல்வதை மூடத்தனமாக எண்ணாமல், கர்ப்பிணிபெண்கள் நாளை நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தில் முடிந்த அளவுக்கு இந்த கதிர்வீச்சுகள் தன் மீது படாமல் இருக்குமாறு வீட்டுக்குள்ளே இருப்பது அவர்களையும் அவர்களின் வயிற்றிலுள்ள குழந்தையையும் பாதுகாப்பதாகும்.

Exit mobile version