இது தெரியுமா..? நீரில் ஊறவைத்த பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!

0
640
#image_title

இது தெரியுமா..? நீரில் ஊறவைத்த பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!

நம் உணவில் மணத்தை கூட்டும் பூண்டு ஒரு சிறந்த மூலிகை பொருள் ஆகும். நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பூண்டை உணவில் சேர்த்து வருவது நல்லது.

தினமும் 1 பல் பச்சை பூண்டு அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் பூண்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்களால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

பூண்டில் வைட்டமின் பி6, கால்சியம், காப்பர், மெக்னிசியம், வைட்டமின் சி, அலிசின், அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட், சிஸ்டீன் சல்ஃபாக்சைடு உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*பூண்டு – 1பல்

*தண்ணீர்

*தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை…

ஒரு பல் பூண்டை தோல் நீக்கி இடித்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பின்னர் அதில் இடித்த பூண்டை சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

நீரில் பூண்டு பல் சேர்த்து அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

1)நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

2)இரத்தத்தில் உள்ள சரக்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

3)வாயு, செரிமானக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்யும்.

4)உடல் எடையை குறைக்க உதவும்.

5)இதயம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும்.

6)இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த ஓட்டத்தை சீரக வைக்க உதவும்.

7)உடலில் புற்றுநோய் செல் வளர்ச்சியை தடுக்கும்.

8)முகப்பருக்களை போக்கும்.

9)சொத்தைப்பல் வலிக்கும் சிறந்த தீர்வாக இருக்கும்.