இது தெரியுமா? காலில் கட்டும் கருப்பு கயிற்றில் இத்தனை விஷயங்கள் அடங்கி இருக்கா?

0
97
#image_title

இது தெரியுமா? காலில் கட்டும் கருப்பு கயிற்றில் இத்தனை விஷயங்கள் அடங்கி இருக்கா?

நம்மில் பெரும்பாலானோர் காலில் கருப்பு கயிறு கட்டியிருப்போம். இல்லையென்றால் கருப்பு கயிறு கட்டியவர்களை பார்த்திருப்போம். ஆனால் இதை எதற்காக கட்டிக் கொள்கிறோம் என்ற முறையான காரணம் நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

ஒருசிலர் காரணம் அறிந்து கட்டிக் கொள்கிறார்கள். ஒருசிலர் பிறர் கட்டி இருப்பதை பார்த்து காட்டுகிறார்கள். வேறு சிலரோ பேஷனுக்காக கட்டிக் கொள்கிறார்கள். நீங்கள் உங்கள் காலில் கருப்பு கயிறு கட்டி கொண்டதற்கு நீங்கள் கூறும் காரணம் எதுவாக இருந்தாலும் அதன் உண்மை தன்மையை அறிந்து கொண்டால் கண்டிப்பாக நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

காலில் கருப்பு கயிறு காட்டுவதால் உண்டாகும் பயன்கள்:-

பொதுவாக கருப்பு என்பது கண் திருஷ்டியை போக்க கூடியது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. அதன்படி பெண்கள் தங்களது இடது காலிலும் ஆண்கள் தங்களது வலது காலிலும் கட்டிக் கொண்டால் கண் திருஷ்டி, எதிர்மறை எண்ணங்கள் நம்மை அண்டாது.

அதுமட்டும் இன்றி உடலில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காகவும், நம்மிடம் நேர்மறை ஆற்றல் பெருகவும் இவை கட்டிக் கொள்ளப்படுகிறது.

ஆண்களோ, பெண்களோ இந்த கயிற்றை தங்களின் கால்களில் கட்டும் பொழுது 3, 5, 7, 9 என்ற எண்ணிக்கையில் தான் முடிச்சி போட வேண்டும். அதேபோல் இந்த கயிற்றை நண்பகல் 12 மணிக்கு கட்டினால் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த கயிற்றை ஞாயிற்று கிழமை கட்டினால் அதிக பலன் உண்டாகும். ஞாயிற்று கிழமை கட்ட முடியாதவர்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கோயிலுக்கு சென்று பூஜை செய்து விட்டு பின்னர் இதை காலில் கட்டிக் கொள்ளலாம்.

இந்த கயிற்றை காலில் கட்டும் பொழுது தங்களது இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து கொண்டு கட்ட வேண்டும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. அதேபோல் ஓம் என்ற வார்த்தை மனதில் உச்சரித்து கொண்டும் கட்டலாம்.

இந்த கயிற்றை ஒருமுறை கட்டிவிட்டால் அப்படியே விட்டுவிடக் கூடாது. 48 நாட்களுக்கு ஒருமுறை இந்த கயிற்றை கழட்டி புது கயிற்றை மாற்ற வேண்டும்.