இது தெரியுமா? சுண்ட காய்ச்சிய பாலில் இரண்டு சொட்டு நெய் சேர்த்து குடித்தால் உடலுக்குள் இவ்வளவு மாற்றங்கள் நடக்குமாம்!!
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வாரி வழங்கும் பொருட்களில் ஒன்று பால்.இரவு நேரத்தில் பால் குடித்துவிட்டு உறங்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது.இவை உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
பாலில் சர்க்கரை சேர்ப்பதற்கு பதில் பனங்கற்கண்டு,நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.அதேபோல் மஞ்சள்,மிளகு தூள் சேர்த்த பால் உடலுக்குள் ஒரு மருந்தாக செயல்படுகிறது.பாலில் உள்ள கால்சியம் சத்தானது எலும்பு மற்றும் பற்களின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
பாலில் தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சி ஒன்று அல்லது இரண்டு துளி நெய் சேர்த்து அருந்தி வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.
உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்க பாலில் நெய் சேர்ந்து அருந்தலாம்.இரவில் நல்ல தூக்கம் கிடைக்க பாலில் நெய் சேர்த்து அருந்தி வரலாம்.
செரிமான மண்டலம் ஆரோக்கியம் பெற,அவை சீராக இயங்க நெய் சேர்த்த பால் அருந்துவது நல்லது.
உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது.பாலில் நெய் சேர்த்து அருந்துவதால் அவை கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இளம் வயதினர்,முதியவர் என்று அனைவரும் மூட்டு வலியால் அவதிடயடைந்து வருகின்றனர்.இதை முழுமையாக குணமாக்க,மூட்டு வராமல் தடுக்க நெய் சேர்த்த பால் அருந்துங்கள்.
மேனியில் உள்ள சுருக்கம்,வறட்சி நீங்கி பொலிவாகவும்,இளமையாகவும் இருக்க இதை தினமும் இரவில் குடிப்பது நல்லது.
இன்றைய காலகட்டத்தில் பலர் உடல் பருமனால் அவதிடயடைந்து வருகின்றனர்.உடலில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து வெளியேற பாலில் நெய் சேர்ந்து அருந்துவது நல்லது.இரவில் எந்த ஒரு தொந்தரவும் இன்றி நிம்மதியாக தூங்க இந்த நெய் சேர்த்த பால் உதவும்.