இது தெரியுமா? கற்றாழையை இப்படி சாப்பிட்டால் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும்!

0
148
#image_title

இது தெரியுமா? கற்றாழையை இப்படி சாப்பிட்டால் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும்!

கற்றாழை அதிக மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகை செடி ஆகும். கற்றாழையில் சோடியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, பி1, பி2, குளோரின், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கு.
கற்றாழை ஜெல்லை அரைத்து காலை நேரத்தில்அருந்தி வந்தால் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும்.

கற்றாழை மடலில் உள்ள ஜெல்லை தனியாக பிரித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்து ஒரு டம்ளருக்கு மாற்றிக் கொள்ளவும். சுவைக்காக தேன் அல்லது எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து பருகலாம்.

கற்றாழை சாறு உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

சரும பராமரிப்பிற்கு சிறந்த தீர்வாக கற்றாழை சாறு இருக்கின்றது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வயிறு வலி, உதிரப் போக்கு உள்ளிட்டவற்றை சரி செய்ய கற்றாழை சாறு பெரிதும் உதவுகிறது. உடல் சூட்டை குறைப்பதில் கற்றாழை சாறு சிறந்த தீர்வாக இருக்கும்.