நம் அனைவருக்கும் பழங்கள் பிடித்த உணவுப் பொருளாக இருக்கின்றது.ஆப்பிள்,ஆரஞ்சு,திராட்சை,மாதுளை,கொய்யா,வாழைப்பழம்,பப்பாளி என்று பேவரைட் பழங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
பழங்களை பொறுத்தவரை ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்,வைட்டமின்கள்,தாதுக்கள் மற்றும் கனிமங்கள் அதிகளவு நிறைந்திருக்க கூடிய ஒன்றாகும்.இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தினமும் ஏதேனும் ஒரு பழம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் உடலில் கொலஸ்ட்ரால்,உயர் இரத்த அழுத்தம்,இதய நோய்,கேன்சர் போன்ற நோய் பாதிப்புகள் அண்டாமல் இருக்கும்.பழங்களில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்க உரிய நேரத்தில் உட்கொள்ள வேண்டியது அவசியம்.
பழங்களில் இருந்து அதிக ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு கிடைத்தாலும் அதை உட்கொள்வதற்கு உரிய நேரம் இருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.ஆப்பிள்,மாம்பழம்,அன்னாசி,தர்பூசணி,மாதுளை,வாழை போன்ற பழங்களை காலை நேரத்தில் உட்கொண்டால் நாள் முழுவதும் புத்துணர்வு கிடைக்கும்.இந்த பழங்களை காலை நேரத்தில் சாப்பிடுவதால் வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் முழுமையாக கிடைக்கும்.இதனால் உடல் சோர்வு நீங்கி வேலையில் முழு கவனம் செலுத்த முடியும்.
நீர்ச்சத்து நிறைந்த பழங்களை காலை நேரத்தில் சாப்பிட்டால் உடலில் செரிமானப் பிரச்சனை நீங்குவதோடு உடலுக்கு தேவையான நீர்ச்சத்து முழுமையாக கிடைக்கும்.காலை நேரத்தில் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.பழங்களில் கலோரி மிகவும் குறைவாக இருப்பதால் காலை நேரத்தில் இதை உட்கொள்வதால் உடல் எடை விரைவில் குறைந்துவிடும்.