இது தெரியுமா? பலா பழத்தை விட அதன் விதைகளில் தான் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது!!

0
92
#image_title

இது தெரியுமா? பலா பழத்தை விட அதன் விதைகளில் தான் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கிறது!!

நம்மில் பெரும்பாலானோருக்கு பலாப்பழம் விரும்பி சாப்பிட கூடிய பழ வகைகளில் ஒன்றாக இருக்கிறது.இதன் வாசனை மற்றும் சுவை அனைவரையும் உண்ண தன் பக்கம் இழுக்கும்.இந்த பழம் தமிழகத்தில் பண்ருட்டி,தேனி,நீலகிரி உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் விளைகிறது.
இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது.

இந்த பழத்தை கொண்டு ஜூஸ்,ஹல்வா,கேக்,இனிப்பு பண்டங்கள் செய்யப்படுகிறது.இந்த பலா பழத்தை காட்டிலும் அதில் உள்ள விதையில் தான் அதிகளவில் சத்துக்கள் அடங்கி இருக்கிறது.

பெரும்பாலானோர் பலா பழத்தை விரும்பி உண்பது போல் அதன் விதைகளை விரும்பி உண்பதில்லை.இந்த பலா விதைகளை வேக வைத்து சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.அதேபோல் பலா விதைகளில் ஹல்வா,குழம்பு உள்ளிட்டவைகளும் செய்து உண்ணப்பட்டு வருகிறது.

பலாபழ விதிகளின் மகத்தான நன்மைகள்:-

*பலா விதைகளில் புரதம்,வைட்டமின் ஏ,பி,துத்தநாகம், இரும்பு, கால்சியம், தாமிரம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

*பலாப்பழ விதையில் வைட்டமின் ஏ நிறைந்துருப்பதால் பார்வை திறனை மேம்பட அவை பெரிதும் உதவுகிறது.மாலைக்கண்,கண்புரை,மாகுலர் போன்ற பிரச்சனை வராமல் தடுக்கிறது

*உடலில் எலும்பு வளர்ச்சிக்கு பலா விதை பெரிதும் உதவுகிறது.அதேபோல் இந்த விதையில் உள்ள அதிகளவு புரத சத்து நம் உடலின் தசைகளை வலிமையாக வைத்து கொள்ள உதவுகிறது.

*இரத்த சோகை நோய் பாதிப்பு இருப்பவர்கள் பலா விதைகளை வேக வைத்து உண்டு வரலாம்.பலா விதையில் அதிகளவு இரும்புச் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் அவை உடலில் இரத்த சோகை பாதிப்பை சரி செய்யும்.

*இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதினால் விரைவில் முதுமை ஏற்படாமல் தடுக்கிறது.

*பலா பழ விதையில் அதிகளவு தியாமின் மற்றும் ரிபோஃப்ளேவின் நிறைந்துள்ளது.இவற்றை உண்டு வருவதால் தோல் சம்மந்தபட்ட பாதிப்பு விரைவில் சரியாகும்.

*இந்த விதையில் அதிகளவு நார்ச்சத்து அடங்கியிருப்பதால் இவற்றை உண்ணும் போது செரிமானம் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகிறது.

*பலா விதைகளில் இருக்கின்ற வைட்டமின் ஏ மற்றும் புரதச்சத்து முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

*இதில் உள்ள நார்ச்சத்து,கரோட்டினாய்டுகள்,பீனாலிக் அமிலம் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் இருக்கின்ற கொலட்ஸ்ரால் அளவை குறைக்க உதவுகிறது.