Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு resume மில் என்ன விவரங்கள் இருக்கணும் தெரியுமா? இப்படி செய்தால் எல்லா வேலையும் உங்களுக்குத்தான்!! 

ஒரு resume மில் என்ன விவரங்கள் இருக்கணும் தெரியுமா? இப்படி செய்தால் எல்லா வேலையும் உங்களுக்குத்தான்!!

வேலை தேடுபவர்களுக்கு முக்கியமான ஒன்று ரெஸ்யூம் இருந்தால் மட்டுமே நிறுவனங்கள் உள்ளே அனுமதிப்பார்கள். இது இந்த காலகட்டத்தில் நடைமுறையாக உள்ளது. சில நிறுவனங்கள் ரெஸ்யூம் வைத்துதான் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் அவர்கள் இந்த கம்பெனிக்கு தேவையா தேவையில்லையா என்று முடிவு செய்கிறார்கள். அந்த அளவுக்கு ரெஸ்யூம் இந்த காலகட்டத்தின் வேலை தேடுபவர்களுக்கு முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.

சிலர் ரெஸ்யூம் வேண்டுமென்றால் உடனடியாக கம்ப்யூட்டர் சென்டர் சென்று அங்கு ஏதேனும் ஒரே மாடலை காப்பி செய்து அதில் அவர்களின் விவரங்களை கொடுத்து விடுவார்கள் இதுதான் வழக்கமாக நடந்து வருகிறது. ஆனால் ஒரு ரெஸ்யூம் எவ்வளவு முக்கியம் என்பது வேலை தேடி அலைந்து வேலை கிடைக்காதவர்களுக்கு தான் தெரியும் ரெஸ்யூம் என்பது உங்கள் பற்றிய தகவல்களை ஒரு பக்கத்தில் தெரிவித்து. அந்த நிறுவனத்திடம் வேலை வாங்குவதற்கு உதவுவது ரெஸ்யூம் ஆகும். மேலும் ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும் அதில் என்னென்ன இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதனை சரி செய்து வேலை தேடுங்கள். நீங்கள் வேலை தேடும் போது நேர்காணல் நடத்தாமல் சில நிறுவனங்கள் ரெஸ்யூம் வைத்து ஆட்களை வேலை எடுப்பார்கள். இதனால் ரெஸ்யூம் தற்போது காலகட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.

1. இதில் முதலில் ரெஸ்யூமில் உங்களது பெயர், முகவரி தொலைபேசி எண், இணையதளம் முகவரி இது மட்டும் முதல் இடத்தில் இடம் இருக்க வேண்டும்.

2. உங்களது புகைப்படத்தை சிறியதாக அதன் கீழ் பிறந்த தேதியை குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

3. அதனை அடுத்து நீங்கள் என்ன படித்து உள்ளீர்கள் எந்த கல்லூரியில் பட்டம் பெற்றீர்கள் எந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படித்து முடித்து உள்ளீர்கள். மேலும் எந்த ஆண்டு முடித்தீர்கள் அதில் என்ன சதவீதம் பெற்றீர்கள் போன்ற விவரங்களை இரண்டாவதாக தர வேண்டும்.

4. அடுத்ததாக உங்களிடம் இருக்கும் தனி திறன்கள்  கடுமையாக உழைப்பேன், எளிதில் எல்லாவற்றையும் புரிந்து கொள்வேன், குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிப்பேன் இது போன்ற பல தனித் திறன்களை அதில் குறிப்பிட வேண்டும்.

5. அதனைத் தொடர்ந்து பள்ளியிலோ அல்லது கல்லூரியிளோ நீங்கள் படிக்கும் போது என்னென்ன படிப்பு சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டே எதனை சாதித்து உள்ளீர்கள் மற்றும் கல்லூரிகளில் என்ன புதிதாக கற்றுக்கொண்டது மற்றும் உங்கள் படிப்பு சம்பந்தப்பட்ட வேறு என்ன படிப்புகள் தெரியும்.

4. சான்றிதழ் விவரங்கள் தமிழ்நாடு அளவில் போட்டியிலோ அல்லது இந்திய அளவில் போட்டியிலோ கலந்து கொண்டு ஏதேனும் சான்றிதழ் பெற்று உள்ளீர்களா மற்றும் கல்லூரிகளில் கலந்துகொண்டு ஏதேனும் ஆராய்ச்சி சான்றிதழ்  போன்று ஏதேனும் உங்களிடம் உள்ளதா என்ற விவரங்களை அதில் பதிவிட வேண்டும்.

5. அடுத்ததாக உங்களுக்கு ஏதேனும் தனித்திறன் உள்ளதா கணினி பற்றிய முழு தகவல்கள் அல்லது ஐஐடியில் வேலை பார்ப்பதற்கான ஏதேனும் ஆறு மாத படிப்பை படிப்பு ஏதேனும் படித்து உள்ளீர்களா என்ற தகவல்களை அதில் தெரிவிக்க வேண்டும்.

6. மேலும் அதனைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தில் பணிபுரிய தேவையான தனி திறன்கள் ஏதேனும் இருக்கிறது. அந்த திறன்கள் பற்றிய தகவல்களையும் தெரிவிக்க வேண்டும்.

7. கடைசியாக உங்களது கையெழுத்து, தேதி, ஊர் பெயர் இந்த விவரங்களை கொடுத்து நிறைவு செய்ய வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் கொடுத்து ஒரு நல்ல ரெஸ்யூம் செய்து கொண்டால் பல உயர்தர நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லலாம். இது போன்ற ரெஸ்யூம் எடுத்து சென்றால் உடனடியாக உங்களுக்கு வேலை கிடைக்கும்.

Exit mobile version