எம்ஜிஆர் ஆசை ஆசையாக கேட்டு வாங்கிய பொருள் எதுன்னு தெரியுமா?

0
152
#image_title

எம்ஜிஆர் ஆசை ஆசையாக கேட்டு வாங்கிய பொருள் எதுன்னு தெரியுமா?

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்தார். சினிமாவில் இவருடைய நடிப்பால் கோடாணக்கோடி மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து தமிழகத்திற்கு முதலமைச்சராகவும் சிறந்து விளங்கி, மக்களுக்கு பல நலத்திட்டங்களை வகுத்து கொடுத்தார்.

முதலமைச்சர் ஆன பிறகு எம்ஜிஆருக்கு நிறைய பரிசுகள் வருமாம். ஆனால், அவர் ஆசைப்பட்ட பரிசு பொருள் பற்றிய தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல தயாரிப்பாளரான திருச்சி சௌந்தர்ராஜன் 25 வருடங்களாக சினிமாவில் படங்களை தயாரித்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் சினிமாவிலிருந்து விலகினார். இவர் 25 வருடங்களாக தன் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் தேடி போய் ஒரு விலையுயர்ந்த பேனாவை பரிசாக கொடுக்க முடிவெடுத்தார். அதேபோல், பலருக்கும் இவர் போன கொடுத்து வந்துள்ளார்.

இவரிடம் காஸ்ட்யூம் டிசைனராக இருந்த எம்.நடேசன் பிற்காலத்தில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் மாறினார். இவர் எம்.ஜி.ஆரை வைத்து என் கடமை என்ற படத்தை தயாரித்தார்.

ஒருமுறை நடேசனை பார்க்க சவுந்தராஜனின் மகள் வந்தாராம். நடேசனிடம் சென்ற சவுந்தராஜனின் மகள் உங்களுக்கு ஒரு பேனா எடுத்து வந்து இருக்கிறேன் என்று கொடுத்தாராம்.

அதை கேட்ட எம்.ஜி.ஆர் எனக்கு பேனா இல்லையா என்று கேட்டாராம். அதற்கு அவர் மகளோ எங்க அப்பாக்கிட்ட வேலை செஞ்சிருக்கீங்களா என்று கேட்டாராம். அதற்கு எம்ஜிஆர், உங்க அப்பா தயாரித்த பைத்தியகாரன் படத்தில் நான்தான் நடித்தேனே என்றாராம்.

இதை மகள் போய் தந்தை சவுந்தராஜனிடம் சொல்ல, அவர் ரொம்ப மகிழ்ச்சி அடைந்து மறுநாளே ஒரு புது பேனாவை வாங்கி எம்.ஜி.ஆருக்கு பரிசாக கொடுத்து அனுப்பினாராம். இதுதான் எம்.ஜி.ஆர் வாழ்க்கையிலேயே கேட்டு வாங்கியே ஒரே பரிசாம்.