ஜூன் 21 நாளை நிகழவிருக்கும் கிரகணம் எந்த வகை சூரிய கிரகணம் என்று தெரியுமா?

0
145

சூரிய கிரகணம் என்றால் என்ன? சூரிய கிரகணத்தில் எத்தனை வகைகள் உள்ளன? நாளை நடக்கவிருக்கும் சூரிய கிரகணம் எந்த வகை? என்பதனை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஜூன் 21 ஞாயிற்றுக் கிழமை அன்று நிகழவிருக்கும் சூரிய கிரகணம் கிட்டத்தட்ட 6 மணி நேரம் நீடிக்கும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றன.இந்திய நேரப்படி காலை 9.15 மணிக்கு தொடங்கி மதியம் 12.10மணிக்கு சூரிய கிரகணம் உச்சமடையும் மேலும் மதியம் 3.02 மணிக்கு கிரகணம் முடிவடையும்.இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதல் நீண்ட கிரகணம் ஆகும். இந்தமுறை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த கிரகமானது தெரியும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

சூரிய கிரகணம் என்றால் என்ன?

கிரகணம் என்பது வானில் நடக்கும் ஒரு அற்புத நிகழ்வு.கிரகணம் என்பது சூரியன் சந்திரன் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதே நாம் கிரகணம் என்கிறோம்
சூரிய கிரகணம் என்பது சந்திரன், பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் ஒரே நேர்கோட்டில் அமைந்து சூரியனை மறைப்பது சூரிய கிரகணம் என்கிறோம்.இந்த கிரகணத்தில் சந்திரன் சூரியனை மறைக்கும் அமைப்பை பொறுத்து மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.அந்த வகைகளைப் பற்றி காண்போம்.

முழு சூரிய கிரகணம் :

முழு சூரிய கிரகணத்தின் போது சந்திரன் பூமிக்கு மிக அருகில் ஒரே நேர்கோட்டில் இருக்கும்.சூரியனை விட சந்திரன் மிகச் சிறிய கோள் என்றாலும் பூமிக்கு மிக அருகில் இருப்பதால் சூரியனை முழுவதுமாக மறைத்து விடுகிறது.இதனால் சூரிய ஒளி பூமியில் முழுவதுமாக படுவதை தவிர்க்கக்கப்படுகிறது.
இதனால் பூமியில் இருந்து சூரியனை முழுவதுமாக பார்க்க முடியாத நிலைமை ஏற்படும் இதுவே முழு சூரியகிரகணம் என்பர்.

பகுதி சூரிய கிரகணம்:

இந்த கிரகத்தில் சந்திரன் சூரியனை ஒரு பகுதி மட்டுமே மறைக்கும்.நிகழ்வு பகுதி சூரிய கிரகணம் என்பர்.

வளைய சூரிய கிரகணம்:

இந்த கிரகணத்தை வட்ட கிரகணம் அல்லது வளைய சூரிய கிரகணம் என்று கூறுவர்.சந்திரன் பூமியில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் பொழுது அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வருகிறது அதாவது சூரியனின் மையத்தில் சந்திரன் வருவதால் அதன் நிழல் பகுதி சூரியனை மறைக்கும்.சூரியனை முழுவதுமாக ஒரு வட்ட வடிவத்தில் மறைக்கப்படும்.மறைக்கப்பட்ட பகுதிக்கு வெளியே உள்ள பகுதி ஒளிரும் இது ஒரு வட்டம் வளையமாக காணப்படும் இதனாலேயே இந்த கிரகணத்தை வளைய கிரகணம் என்று கூறுவர்.

நாளை நடக்கவிருக்கும் இந்த கிரகமானது மூன்றாவது வகையைச் சேர்ந்த வளைய வடிவ சூரிய கிரகணம் ஆகும் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றன.