நமது கலாச்சாரப்படி தாலி என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேலி போன்றது.கழுத்தில் எத்தனை நகைகள் அணிந்தாலும் தாலிக்கு கயிற்றுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது.இன்று பெரும்பாலான பெண்கள் தங்கத்தால் ஆன தாலி சரடை அணிவதை விருப்புகிறார்கள்.ஆனால் மஞ்சள் பூசிய தாலி கயிறு அணிவதே சிறப்பாகும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த தாலி அறுந்து விழுவது அதாவது தவறுவது போல் கனவு வந்தால் அது அபசகுனமாக தோன்றும்.இதுபோன்ற கனவு வருவதை நம்மால் தடுக்க இயலாது.ஆனால் இதுபோன்ற கனவு வந்தால் அச்சப்பட தேவையில்லை என்று சாஸ்திரம் சொல்கிறது.
திருமணம் ஆன பெண்களுக்கு தாலி அறுவது போன்று கனவு வருவது இயல்பான ஒன்று.இதுபோன்ற கனவு வந்தால் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.இது கணவன் மனைவி சண்டை,இருவருக்கும் இடையே இருக்கின்ற அதிருப்தி காரணமாக வரும்.கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை சச்சரவு இருந்தால் இதுபோன்ற கனவுகள் ஏற்படும்.
அதுவே திருமணம் ஆகாத பெண்ணிற்கு தாலி அறுவது போன்று கனவு வந்தால் அவர்கள் அதை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் சற்று கவனமாக இருக்க வேண்டுமென்று அர்த்தம்.அவரது ஆழ்மனதில் திருமணம் பற்றிய பயம் அல்லது பதற்றம் இருந்தால் இதுபோன்ற கனவுகள் வரக் கூடும்.
உங்களுக்கு வரன் பார்க்கும் சமையத்தில் இதுபோன்ற கனவுகள் வருகிறது என்று நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.தங்களுக்கு நடைபெறவிருக்கும் திருமணத்தில் ஏதேனும் ஆபத்து நிகழப்போகிறது என்று அர்த்தம்.உங்களுக்கு எதையோ உணர்த்த தான் இந்த கனவு வ்ருகிறது.இதுபோன்ற கனவு வந்தால் வரன் பார்ப்பதை சிறிது காலத்திற்கு தள்ளிப்போடுவது நல்லது.