Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் ஆலயம் வந்தால் இது எதற்கான இந்த அறிகுறி தெரியுமா?

Do you know what this sign is when you see a temple in your dream?

Do you know what this sign is when you see a temple in your dream?

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் ஆலயம் வந்தால் இது எதற்கான இந்த அறிகுறி தெரியுமா?

கனவு என்பது ஒருவருக்கு பல விதங்களில் தோன்றுகிறது. ஒருவர் தினசரி நினைத்துக் கொண்டே இருக்கும் சிந்தனை கூட கனவில் வரும் என்று கூறுவர். அதேபோல ஒரு சிலருக்கு வாழ்க்கையில் நடக்க போகும் நல்ல மட்டும் தீய காரியங்கள் முன்கூட்டியே கனவில் சில அறிகுறிகளாக தெரிவிக்கும்.

அதுபோல பலருக்கு கோவில் கனவில் வரும்.அவ்வாறு வந்தால் நல்லதா?கெட்டதா? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அல்லது ஏ நேர்த்திகடன் செய்யாமல் இப்படி காட்டுகிறதா என்ற பல குழப்பம் எழும்.உங்கள் கனவில் ஏதேனும் ஆலத்திற்கு நீங்கள் செல்வது போல தோன்றினால் நீங்கள் உங்கள் நண்பர்களிடம் கேட்ட பணம் தேவையான உதவி போன்றவை கிடைக்கும்.

அதேபோல கோவிலுக்கு சென்று அங்குள்ள கூட்டத்தில் சிக்கியது போல் கனவு வந்தால் முடியாத ஒரு பிரச்சனை உருவாக போவதற்கான அறிகுறி ஆகும். கோவில் திருவிழாவை வேடிக்கை பார்ப்பது போல் கனவு வந்தால் வீட்டில் புதிய பொருட்கள் வாங்குவீர்கள். நீங்கள் மட்டும் தனியாக ஆலயத்தில் சிக்கிக் கொண்டது போல் கனவு வந்தால் உங்களது தொழிலில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

ஏதேனும் ஒரு கோவிலில் சுமங்கலி பெண் விளக்கு போடுவது போல கனவு ஏற்பட்டால் உங்களது வீட்டில் சுபகாரியங்கள் நடக்கப் போகிறது என்று அர்த்தம். ஒரு கோவிலை நீங்களே திறப்பது போல் கனவு வந்தால் நீங்கள் எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி அடையும்.

எப்படி கோவிலுக்கு சென்றால் கோவிலின் கோபுரத்தை கண்டு வணங்குவோமோ அதே போல் கனவில் இந்த கோபுரத்தை காண்பது போல் வந்தால் வாழ்க்கையின் உயர்ந்த இடத்திற்கு செல்ல போகிறீர்கள் என்பதற்கான அறிகுறி.கோவிலில் உள்ள நவக்கிரகம் கனவில் வந்தால் உங்களுக்கு சிறு சிறு பிரச்சனைகள் உண்டகா போகிறது என்பது அர்த்தம்.

Exit mobile version