நடிகர் வருண்தேஜ் லாவண்யா திரிபாதி அவர்களின் திருமணம் எங்கு எப்பொழுது தெரியுமா?
பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜா மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி ஆகியோர்களின் திருமணம் நடைபெறவுள்ள இடம், தேதி, ஆகிய தகவல்களும் வரவேற்பு நிகழ்ச்சி குறித்த தகவல்களும் கிடைத்துள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு வெளியான ஹேன்ட்ஸ் அப் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகர் வருண் தேஜ் அவர்கள் அதற்கு பிறகு 2014ம் ஆண்டு வெளியான முகுந்தா என்ற திரைப்படத்தில் நடித்து கதாநாயகனாகவும் நடிகராகவும் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ச்சியாக கஞ்சே, லோபர், எப் 2, மிஸ்டர், ஃபிடா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஆபரேசன் வேலன்டைன் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹிந்தி சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளார்.
அதே போல 2012ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான அண்டலா ராக்சஷி என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான பிரம்மன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அடுத்ததாக மாயவன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழில் மீண்டும் வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை திருப்பினார்.
இந்நிலையில் நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி இருவரும் மிஸ்டர் திரைப்படத்தில் முதன் முதலாக இணைந்து நடித்திருந்தனர். அப்பொழுது இருந்தே இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து சமீபத்தில் பெற்றோர் சம்மதத்துடன் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி அவர்களின் நிச்சியதார்த்தம் முடிந்தது.
இதையடுத்து வருகின்ற நவம்பர் 1ம் தேதி நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி ஆகியோருடைய திருமணம் இத்தாலியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 5ம் தேதி நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் அந்த திருமண அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.