Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்திலேயே சிறந்த பேரூராட்சி எங்குள்ளது தெரியுமா?

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் உள்ளிட்ட தினங்களில் சிறந்து விளங்கும் பல்வேறு துறைகளில் அவற்றை ஊக்குவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

அதேபோல நாட்டின் 75 வது சுதந்திர தினமான இன்றைய தினமும் தமிழகத்தில் சிறந்து விளங்கிவரும் பல்வேறு துறைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டனர்.

அந்த விதத்தில், சிறந்த பேரூராட்சிக்கான விருது செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சிக்கு கிடைத்திருக்கிறது.

சுதந்திர தின விழாவில் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகள் வழங்கப்படும். அந்த விதத்தில், செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி, கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்டம் சோழவந்தான், பேரூராட்சிகள் சிறந்த பேரூராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கு 10 லட்சம், 5 லட்சம், 3 லட்சம், உள்ளிட்ட அளவுகளில் பரிசு தொகைகள் வழங்கப்பட்டனர்.

கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன், தலைவர் தசரதன், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், தலைவர் ஸ்டீபன், சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர், சுதர்சன் தலைவர் ஜெயராமன், உள்ளிட்டோர் இன்று சுதந்திர தின விழாவில் முதலமைச்சரிடம் பரிசு பெற்றார்கள்.

Exit mobile version