உடலின் எந்த இடம் துடித்தால் என்ன பலன் என்று தெரியுமா?

0
2015
உடலின் எந்த இடம் துடித்தால் என்ன பலன் என்று தெரியுமா?

உடலின் எந்த இடம் துடித்தால் என்ன பலன் என்று தெரியுமா?

பல்லி விழும் பலன்களை போலவே நம் உடலில் ஏதேனும் ஒரு பகுதி துடித்தால் சில நன்மை தீமைகள் உண்டு என்பதனை ஜோதிட ரீதியாக நம்பப்படுகிறது.இது சில சமயங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாறுபடும். எந்தப் பகுதி துடித்தால் என்ன பலன் என்பதனை பற்றி பார்ப்போம்.

நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது உங்கள் உதடுகள் துடித்தால் உங்கள் வாழ்க்கையில் புதிய நண்பர்களை சந்திப்பீர்கள் என்று அர்த்தம் அல்லது நீண்ட நாள் பார்க்காதவர்களை விரைவில் சந்திப்பீர்கள் என்று அர்த்தம்.

ஒருவரின் இடது கண் துடித்தால் உங்களைத் தேடி கூடியவிரைவில் ஏதோ ஒரு நல்ல செய்தி வருகின்றது என்று அர்த்தம்.

ஒருவரின் வலது கண் துடித்தால் உங்களின் நீண்டநாள் கனவுகள் பலிக்க போகிறது என்று அர்த்தம்.

ஆண்களுக்கு அவர்களின் வலது,உடல் பாகங்கள் துடிக்கும் மேயானால் அவர்களைத் தேடி அதிர்ஷ்டம் வருகிறது என்று அர்த்தம்.

அதேபோன்று பெண்களுக்கு அவர்களின் இடது உடல் பாகங்கள் துடிக்கும் ஆனால் நல்ல யோகங்கள் வந்துசேரும் என்று அர்த்தம்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் எதிர்மறையாக அதாவது ஆண்களுக்கு இடப்பக்கமாக அல்லது பெண்களுக்கு வலதுபக்கமாக துடித்தால் சில தீமைகள் நடக்கப்போவதாக அர்த்தம்.

ஒருவரின் நெற்றிப் பகுதி துடிக்கும்போது அவர்களுக்கு விரைவில் பணம் வசதி கிடைக்கப் போவதாக அர்த்தம்.

சில நேரங்களில் நாம் மூளை பகுதி துடிப்பதை உணர்ந்திருக்கிறோம். அது வலது பக்கமாக துடிக்கும்போது நல்ல பலன்களை தரப்போகிறது என்று ஜோதிட ரீதியாக நம்பபடுகிறது.

அதுவே இடது பக்கமாக துடிப்பின் ஏதோ ஒரு இறப்புச்செய்தி நம்மை வந்து சேருகிறது என்று அர்த்தம்.