வீட்டு பூஜை அறையில் கடவுள் படங்களுக்கு.. எந்த பூக்களை சூட்டுவது நல்லது தெரியுமா?

0
144

வீடு என்ற ஒன்று இருந்தால் நிச்சயம் பூஜை இருக்க வேண்டும்.வீட்டில் எதிர்மறை சக்திகள் அண்டாமல் இருக்கவும்,கண் திருஷ்டி படாமல் இருக்கவும் வீட்டில் கடவுள் படங்களை வைத்து பூஜை செய்து வழிபட வேண்டும்.

கடவுளின் திருவுருவப் படங்களுக்கு தினமும் பூஜை செய்ய முடியவில்லை என்றாலும் வாரம் ஒருமுறையவது பூஜை செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு பூஜை செய்யும் பொழுது நாம் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்க செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நாளில் மட்டும் வீடு துடைக்கக் கூடாது.மற்ற தினங்களில் வீடு மற்றும் பூஜை அறையை துடைக்க வேண்டும்.அமாவாசை,பௌர்ணமி போன்ற தினங்களில் பூஜை அறையை துடைத்து பூஜை செய்து வழிபட வேண்டும்.

பூஜை அறையில் ஒட்டடை படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் காய்ந்த பூக்கள்,காய்ந்த மலர்கள்,காய்ந்த எலுமிச்சை இருந்தால் அதை அகற்றிவிட வேண்டும்.புதிய மாலை மற்றும் மலர்களை தான் கடவுளுக்கு சூட்ட வேண்டும்.

பூஜை அறையில் வண்ண மலர்களை சூட்டுவது முக்கியம் இல்லை.கடவுளுக்கு ஏற்ற பூக்களை சூட்டுவது தான் முக்கியம்.ஆனால் இக்காலத்து பெண்களுக்கு பூஜை செய்வதில் அதிக ஈடுபாடு இல்லாததால் பூஜை சம்மந்தப்பட்ட விஷயங்கள் அவர்களுக்கு தெரிவதில்லை.

பூஜை அறையில் கடவுள் படங்களுக்கு ரோஜா,மல்லிகை,மரிக் கொழுந்து மற்றும் முல்லை போன்ற அதிக வாசனை நிறைந்த மலர்களை தான் சூட்ட வேண்டும்.சிலர் பிளாஸ்டிக் பூக்களை சூட்டும் பழக்கம் கொண்டிருப்பார்கள்.பூஜை அறையில் தெய்வீக வாசம் நிறைந்திருக்க வாசனை நிறைந்த மலர்களை தான் சூட்ட வேண்டும்.எனவே தினமும் ஏதேனும் ஒரு வாசனை நிறைந்த மலர்களை கடவுள் படங்களுக்கு சூட்டுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.