கூந்தலை பளபளப்பாக வைத்துக் கொள்ள விரும்பும் பெண்கள் கடையில் விற்கும் இரசாயன பொருட்களை பயன்படுத்துவதை முதலில் தவிருங்கள்.பால்,நெய்,வெண்ணெய் போன்ற பொருட்களை வைத்து பளபளப்பான கூந்தலை பெறலாம்.
பால் பொருட்களில் லாக்டோ என்ற வேதிப்பொருள் அதிகளவு உள்ளது.இவை கூந்தல் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிறது.தலைக்கு நெய்,பால்,வெண்ணெய்,மோர்,தயிர் போன்றவையும் பயன்படுத்தலாம்.
பொடுகை போக்க தயிர் பேக் பயன்படுத்தி இருப்பீர்கள்.கூந்தல் பளபளப்பிற்காக பால் கூட பயன்படுத்துவீர்கள்.ஆனால் நெய்,மோர்,வெண்ணெய் போன்ற பொருட்களும் கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என்பதை நீங்கள் நிச்சயம் அறிந்திருக்க மாட்டீர்கள்.
பாலில் வைட்டமின் சி,பொட்டாசியம்,வைட்டமின்கள்,கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.கூந்தலுக்கு பால் அப்ளை செய்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.வறண்ட முடி மிருதுவாகவும்,பளபளப்பாகவும் மாறும்.
நன்கு புளித்த தயிரை தலைக்கு தடவி குளித்தால் பொடுகு நீங்கும்.தலையில் உள்ள பூஞ்சைகள் மற்றும் அழுக்குகள் நீங்கி முடியின் ஆரோக்கியம் மேம்படும்.நெய் மற்றும் தேங்காய் எண்ணெயை மிக்ஸ் செய்து தலைக்கு தடவி குளித்தால் முடி சேதம் குறையும்.அதேபோல் வெண்ணெயை தேங்காய் எண்ணையில் கலந்து தலைக்கு பயன்படுத்தி குளித்து வந்தால் முடி வறட்சி,இளநரை போன்றவற்றிற்கு தீர்வு கிடைக்கும்.மோரில் கற்றாழை ஜெல் சேர்த்து தலைக்கு அப்ளை செய்து குளித்தால் முடி பளபளப்பாக மாறும்.