Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

1000 நாட்கள் திரையரங்குகளில்  ஓடி கொண்டி இருக்கும் திரைப்படம் எது தெரியுமா?

Do you know which movie is running in theaters for 1000 days?

Do you know which movie is running in theaters for 1000 days?

திரைத்துறையில் தற்போது ஒரு வாரம் திரைப்படம் ஓடினால் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. ஆனால் சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் திரையரங்கில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் சிலம்பரசன், த்ரிஷா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்த  வெற்றி படம்  விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம். இந்த படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தின  அன்று வெளியானது. இப்படம் காதல் திரைப்பட வரிசையில் முதல் இடம் பிடித்தது.

இந்த படத்தில் கேரளா தேசத்தின் அழகில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கெளதம் இயக்கத்தில் கார்த்திக் கதாப்பாத்திரத்தில் சிம்புவும், ஜெஸ்ஸி   கதாப்பாத்திரத்தில் த்ரிஷா நல்ல நடிப்பை வெளிபடுத்தியுள்ளது. இந்த படத்தில் வரும் காதல் காட்சிகள் வைத்து அப்போது இருந்த இளைஞர்கள்  காதல் செய்யாமல் இருந்தது இல்லை. இந்த படத்தில் சண்டை மற்றும் காதல் வெளிபாடு மிகவும் அமைதியாக ரசிக்கும்படியுள்ளது. மேலும் இப்படத்தில் பிரபலமான வசனம் இன்றும் அதிக இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர் அது “இங்க என்ன சொல்லுது ஜெஸ்ஸி, ஜெஸ்ஸினு சொல்லுதா” .

மேலும் இந்த படம் கிட்டத்தட்ட 2.75 ஆண்டுகள் அதாவது 1000 நாட்கள் சென்னையில் உள்ள பி.வி.ஆர் திரையில் ஓடி சாதனை படைத்துள்ளது. மேலும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்து மாம்பெரும் வெற்றி படம் என பெயர் பெற்றது என குறிப்பிடத்தக்கது.

Exit mobile version