கார்த்திகை தீபத்திருநாளில் வீட்டில் எந்த வகை விளக்கு ஏற்றினால் பலன் கிடைக்கும் தெரியுமா?

0
105
Do you know which type of lamp you light at home on Karthika Deepatri day will get results?

வருகின்ற டிசம்பர் 13 அன்று தமிழகத்தில் கார்த்திகை தீபம் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.கார்த்திகை மாதம் என்றாலே தீபம் தான் தங்கள் நினைவிற்கு வரும்.இந்த நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையாரின் அருளை பெற அனைவரும் விளக்குகளால் வீட்டை அலங்கரிப்பர்.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி இணையந்து வரும் நாளில் வீடுகளில் தீபம் ஏற்றப்படுகிறது.இந்நன்னாளில் தீபம் ஏற்றுவதால் நம் வாழ்வில் சந்திக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி ஒளி பெருகும் என்பது அனைவரின் நம்பிக்கை.

இவ்வளவு நன்மைகள் கொண்டிருக்கும் தீபத்தை நம் வீட்டில் ஏற்றுவதற்கு முன்னர் நாம் சில விஷயங்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கார்த்திகை தீப நாளில் வீட்டை சுத்தம் செய்து மாலை நேரத்தில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகு நம் வீட்டில் தீபம் ஏற்றுவது வழக்கம்.அப்படி நாம் போடும் தீப விளக்கு புதியதாக இருக்க வேண்டியது முக்கியம்.

சிலர் கடந்த வருடம் பயன்படுத்திய விளக்கை இந்த வருடம் பயன்படுத்துவர்.சிலர் குத்து விளக்கு மற்றும் ஏற்றி வழிபடுவர்.ஆனால் புதுமையான மண் விளக்கில் தான் நாம் தீபம் ஏற்ற வேண்டும்.

அவ்வாறு நாம் வாங்கும் மண் விளக்கு ஒரு முகம் கொண்டவையாக இருந்தால் அது நினைத்த காரியங்களில் வெற்றியடைய செய்யும்.அதுவே இரண்டு முகங்கள் கொண்ட விளக்காக இருந்தால் அது குடும்பத்தில் ஒற்றுமையை அதிகரிக்க செய்யும்.மூன்று முகம் கொண்ட விளக்காக இருந்தால் புத்திர தோஷம் நீங்கும்.

நான்கு முகங்கள் கொண்ட விளக்காக இருந்தால் வீட்டில் வறுமை நீங்கி செல்வ செழிப்பு அதிகரிக்கும்.ஐந்து முகம் கொண்ட விளக்காக இருந்தால் அனைத்துவித நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.வீட்டில் கிழக்கு திசை பார்த்தவாறு வைத்து விளக்கேற்ற வேண்டும்.