Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தல அஜித்துக்கு பிடித்த காமெடியன் யார் தெரியுமா?

#image_title

தல அஜித்துக்கு பிடித்த காமெடியன் யார் தெரியுமா?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், விக்ரம் போன்ற ஸ்டார் நடிகர்களில் ஒருவராவார். தன் கடின உழைப்பால் திரைத்துறையில் முன்னேறிய அஜித் இன்று லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். 90 காலகட்டங்களில் நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர் ஆசை, காதல் மன்னன், காதல் கோட்டை, அமர்க்களம் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார்.

மேலும் வாலி, சிட்டிசன், அட்டகாசம், வில்லன், அசல், வரலாறு உள்ளிட்ட படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் சினிமாவிற்காக உடல் எடையை குறைப்பது, அதிகப்படுத்துவது என கடினமாக உழைப்பார். ஆரம்பத்தில் காதல் மன்னனாக காதல் கதை அம்சங்களில் நடித்த இவர் பிறகு பில்லா, மங்காத்தா என ஆக்சன் படங்களிலும் மிரட்டினார்.

தற்போது வரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக எச் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இவர் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். அதேசமயம் நடிகர் அஜித் நடிகர்களாக இருந்தாலும் இயக்குனர்களாக இருந்தாலும் அவர்களின் திறமைகளை பாராட்டி அவர்களை ஊக்குவிப்பார்.

அந்த வகையில் துணிவு படத்தில் அஜித்துடன் நடித்திருந்த ஜான் கொக்கேன் பலருக்கும், நல்ல வழிகாட்டியாக , பல நல்ல விஷயங்களை கற்றுத் தரும் அஜித்திற்கு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் கூட மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி வெற்றி விழாவில் அஜித் தன்னை ஊக்குவித்ததாகவும் தன் தனிப்பட்ட வெற்றியை அஜித்திற்கு சமர்ப்பணம் செய்வதாகவும் கூறியிருந்தார்.

இதுபோன்று சில வருடங்களுக்கு முன்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சந்தானமும் அஜித்தும் பேசிக் கொண்டிருக்கும் போது சந்தானம் அஜித்திடம் உங்களுக்கு பிடித்த காமெடி நடிகர் யார்? என்று கேட்டுள்ளார். அதற்கு அஜித், ” சொல்லிக் கொண்டே போகலாம். வடிவேலு சார், விவேக் சார், மனோரமா ஆட்சி, அப்புறம் நீங்க” என்று சந்தானத்தையும் தனக்கு பிடிக்கும் என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் ” காமெடி என்பது கடினமானது. அதனை குறைத்து மதிப்பிடக் கூடாது” என்று காமெடியன்களை பாராட்டும் விதமாக பேசியிருந்தார்.

நடிகர் சந்தானம் அஜித்துடன் இணைந்து கிரீடம், பில்லா, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து தற்போது விடாமுயற்சியிலும் நடித்து வருகிறார் என்று செய்திகள் பரவி வருகிறது.

Exit mobile version