பூண்டை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என தெரியுமா??
உடலுக்கு தேவையான சிறந்த அத்தியாவசிய தேவைகளை வழங்க கூடிய ஒன்று பூண்டு.இந்த பூண்டை அன்றாடம் உணவில் சேர்த்து வருவது நல்லது. ஆனாலும் நமது உடல் நலன் அறிந்து உணவு அருந்துவது நல்லது. ஆரோக்கியமான உணவுகள் கூட ஒரு சில உடல் நலன் குறைபாடு உள்ளவர்களுக்கு தீய விளைவுகளை ஏற்படுத்தும்.
அதுபோல யாரெல்லாம் உணவில் பூண்டை சேர்க்கக்கூடாது என்பது பற்றி பார்ப்போம்.
1. கல்லீரல் கோளாறுகள் இருப்பவர்கள் பூண்டை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இது கல்லீரல் நோய்க்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் தாக்கத்தை குறைக்கும்.
2. தாய்ப்பால் ஊட்டும் சமயங்களில் மாதவிடாய் ஏற்படும் பொழுது பூண்டை உணவில் சேர்க்கக்கூடாது. ஏனெனில் இது ரத்தப் போக்கை அதிகரிக்கும்.
3. குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பூண்டினை அதிகம் சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் ரத்த அழுத்தத்தை குறைக்கும் சக்தி பூண்டிற்கு அதிகம் உள்ளது.
4. அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போகிறவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்பே பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பூண்டிற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. எனவே அது ரத்தப்போக்கை உண்டாக்க வாய்ப்பு இருக்கிறது.
5. வயிற்றுக் கோளாறால் அவதிப்படுபவர்கள் பூண்டை உணவில் சேர்க்க வேண்டாம். ஏனெனில் இது குடல் இயக்கத்தை ஊக்கப்படுத்தி வயிற்றுப்போக்கை அதிகப்படுத்தும்.
6. கண் சார்ந்த நோய் மற்றும் கோளாறுகள் இருப்பவர்கள் பூண்டை உணவில் சேர்க்க வேண்டாம். ஏனெனில் இது கண்ணின் ஆரோக்கியத்தை கெடுக்க கூடும்.
7. எந்தவித மருந்துகள் உட்கொண்டு வந்தாலும் பூண்டை அப்போது உணவில் சேர்க்க வேண்டாம். ஏனெனில் மருந்துகளின் ஆற்றலை மாற்றும் சக்தி பூண்டிற்கு நிறையவே உள்ளது.