பூரான் வீட்டிற்கு வந்தால் கொல்லக்கூடாது ஏன் தெரியுமா? பூரான் வந்தால் நன்மையா??

0
632
Do you know why Centipedes should not be killed when he comes home? Is it good Centipedesif comes??

பூரான் வீட்டிற்கு வந்தால் கொல்லக்கூடாது ஏன் தெரியுமா? பூரான் வந்தால் நன்மையா?? 

நம் வீட்டிற்குள் வந்து அடிக்கடி நம்மை தொல்லைப்படுத்தும் விஷப் பூச்சிகளில்ஒன்று பூரான்.பல கால்களுடன் கூடிய தட்டையான ஒரு வகையான விஷப்பூச்சி. பூரானில் சிறிதளவு விஷத்தன்மை உள்ளது. ஆனால் அது மனிதர்களை கடித்தால் பெருமளவு பாதிப்பு ஏற்படுமா? என்றால் இல்லை. கடிப்பட்ட இடத்தில் சிவந்து போதல், வலி, எரிச்சல், ஆகியவை மட்டும் ஏற்படும்.

சிலருக்கு உடலளவில் சிறிதளவு மாற்றம் ஏற்படும். அவர்கள் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

அதேபோல் பூரான் ஒரு வீட்டிற்கு வந்து விட்டால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு ஏராளமான கஷ்டங்கள் ஏற்படும் என நம்பப்பட்டு வருகிறது.

பொதுவாக வீடு என்றாலே லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு இடமாக பார்க்கப்பட்டு வருகிறது. எனவே அந்த வீட்டினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு. மேலும் வீட்டில் விஷ ஜந்துக்கள் வாசம் செய்ய வருகிறது என்றாலே நமது வீடு சுத்தமாக இல்லை என்று தான் அர்த்தம்.

நிறைய வீட்டினுள் குளியலறையில் அடிக்கடி பூரனின் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். இந்தப் பூரான் வீட்டிற்கு வருவது நன்மையா?? தீமையா?? பூரான்களை அடித்துக் கொள்ளக் கூடாது என்று சொல்கிறார்களே அது ஏன் என்பதை பற்றி பார்ப்போம்.

பொதுவாகவே பூரான் நமது வீட்டிற்குள் வருவதற்கு முதல் காரணம் நம் வீட்டினை சுற்றி இருக்கக்கூடிய சூழ்நிலை மற்றும் சேறும், சகதியுமாக இருக்கும் பட்சத்தில் கட்டாயம் பூரான்கள் வீட்டிற்குள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் சுத்தம் இல்லாத அசுத்தம் நிறைந்த இடங்களில் தான் அதிகளவில் பூரான்கள் வசிக்கும்.

வீட்டினை சுற்றி சேரும் சகதியும் இல்லை. சுத்தமான வீட்டில் குளியல் அறைக்குள் பூரான் வருகிறது என்றால் அது நம்முடைய வீட்டிற்கு கஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் மற்றும் உங்கள் வீட்டினை நீங்கள் சுத்தமாக வைக்கவில்லை என்பதை குறிக்கின்றது. உங்கள் வீட்டுக்  கழிவறை, குளியலறை, வாஷ்பேஷன், சிங், இந்த இடங்களை எல்லாம் சுத்தமாக கழுவி வாரத்தில் இரண்டு முறையாவது ப்ளீச்சிங் பவுடரை கொட்டிக் கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் நம் வீட்டிற்கு பூரான், சிறு பாம்பு, தேள், போன்ற விஷ ஜந்துக்கள் வராமல் காக்க முடியும்.

 பூரானை ஏன் கொல்லக்கூடாது என்று கேட்டால் அது வீட்டினுள் வருகின்றது என்றாலே வீட்டை சுத்தப்படுத்த சொல்லி  நம்மை எச்சரிக்கிறது என்று அர்த்தம்.

அதுமட்டுமில்லாமல் விஷப் பூச்சிகளை பூரான் உணவாக உண்ணக்கூடியது. எனவே பூரான் நடமாடும் இடங்களில் நிறைய விஷத்தன்மை உடைய பூச்சிகள் வாழ்கின்றது என்று அர்த்தம்.  பல்லி மற்றும் எலிகளை கூட பூரான் உணவாக உட்கொள்ளும். பூரான்களை அழித்துவிட்டால் விஷத்தன்மை உடைய பூச்சிகளின் எண்ணிக்கை தானாகவே அதிகரித்து விடும் என்பதால் பூரானை அடிக்கக் கூடாது என சொல்லப்படுவதற்கான உண்மை காரணம்