சொந்த வீடு மற்றும் வாடகை வீட்டிற்கு குடியேறும் பொழுது பால் காய்ச்சுவது ஏன் தெரியுமா?

0
185
Do you know why milk is brewed when moving to own house and rented house?

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் வீடு அத்தியாவசிய ஒன்றாக உள்ளது.சிலர் வாடகை வீட்டில் வாசிப்பவர்களாக இருப்பீர்கள்.சிலர் சொந்த வீட்டில் வசிப்பவராக இருப்பீர்.இன்னும் சிலர் விரைவில் சொந்த வீட்டிற்கு குடியேறும் முயற்சியில் ஈடுபட்டிருப்பீர்கள்.

சொந்த வீடோ வாடகை வீடோ எந்த வீட்டிற்கு குடி பெயர்ந்தாலும் நாம் செய்யும் முதல் வேலை பால் காய்ச்சுவது தான்.இது நம் முன்னோர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு பழக்கமாகும்.புதியதாக குடியேறிய வீட்டில் பால் காய்ச்சிவிட்டு தான் மற்ற வேலைகளை தொடங்க வேண்டும் என்பது சம்ரதாயமாக உள்ளது.

இன்று வரை அனைவரும் இந்த பழக்கத்தை கடைப்பிடித்து வருகிறோம்.காலம் காலமாக பின்பற்றி வரும் இந்த பழக்கத்திற்கான காரணம் என்னவென்று சிந்தித்திருக்கிறீர்களா? இது சம்ரதாயம் என்று நினைத்து மட்டுமே அனைவரும் செய்கிறார்கள்.

சொந்த வீடு அல்லது வாடகை வீட்டிற்கு குடியேறியதும் பால் காய்ச்ச முக்கிய காரணம் வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பது தான்.பால் கிழக்கு திசையில் பொங்கினால் வீட்டில் செல்வம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பால் நன்றாக பொங்கி வழிவதால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கும் என்று நம்பப்படுகிறது.புதிதாக குடியேறும் வீட்டில் பால் காய்ச்சுவது நல்ல தொடக்கத்திற்கான செயலாக பார்க்கப்படுகிறது.

பால் காய்ச்சும் பொழுது நன்றாக பொங்கி வழிய வேண்டும்.அதேபோல் புதிய பாத்திரத்தில் மட்டுமே பால் காய்ச்ச வேண்டும்.பாலில் தண்ணீர் சேரத்து காய்ச்சக் கூடாது.விறகு அடுப்பில் பால் காய்ச்சுவது இன்னும் சிறப்பை தரும் என்று நம்பப்படுகிறது.நீங்கள் பால் காய்ச்சும் அடுப்பில் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.பால் காய்ச்சும் பாத்திரத்திலும் மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும்.இது தான் பால் காய்ச்சுவதற்கு பின்னால் இருக்கும் காரணமங்கள் ஆகும்.