Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நிதீஷ்குமார் ஏன் கூட்டணியை விட்டு வெளியேறினார் தெரியுமா? எச் ராஜா பரபரப்பு தகவல்!

ஆர் எஸ் எஸ் என்ற தேச பக்தி இயக்கத்திற்கு தடை விதிக்க சொல்வதா என்று காரைக்குடியில் பாஜகவின் முன்னால் தேசிய செயலாளர் எச். ராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, முதலமைச்சர் ஸ்டாலின் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் தடை விதிப்பு தொடர்பாக தெளிவாக தெரிவித்துள்ளார்.

அதில் தடை விதிக்கப்பட்ட ஏக்கத்திற்கு யாராவது துணை போனால் அதுவும் சட்டவிரோதம் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டது ஒரு நாளில் எடுக்கப்பட்ட முடிவு கிடையாது.

பீகார் மாநிலத்தில் நிதீஷ் குமார் எதற்காக பாஜகவை விட்டு வெளியே செல்ல வேண்டும்? அவருக்கு வழங்கிய ஆதரவை பாஜகவினர் திரும்ப பெற்றுக் கொண்டார்களா? அவர் வெளியேறுவதற்கு இரண்டு நாள் முன்பாக கூட முழுக்காலமும் அவர்தான் முதல்வராக இருப்பார் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்திருந்தார்.

தமிழக அரசை போலவே பீகார் மாநிலத்திலும் ஐ எஸ் இயக்கத்தை அவர் தடுக்காமல் இருந்தார். என் ஐ ஏ களத்தில் இறங்கியது. ஆகவே தன்னுடைய வாக்கு வாங்கி பாதிக்கப்படுகிறது என்று நிதிஷ்குமார் கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

ஆனால் இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட அனைவரும் ஒன்று கூடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version