உங்களில் பலர் காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் சூடான பால் குடிப்பது வழக்கமாக கொண்டிருப்பீர்கள்.பாலில் கால்சியம்,புரதம்,வைட்டமின் ஏ,டி,பொட்டாசியம்,மெக்னீசியம் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டசத்துகள் அதிகளவில் நிறைந்திருக்கிறது.
ஆனால் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பால் குடிப்பது நல்லதா என்று பலருக்கும் தெரிவதில்லை.உண்மையில் காலை நேரத்தில் பால் குடித்தால் உடலில் சில ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.
பால் சிறந்த ஊட்டச்சத்து பானமாக இருந்தாலும் இது சிலர் உடலத்திற்கு ஒற்றுப்போவதில்லை.காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பால் குடித்தால் அது அமிலத்தன்மையை ஏற்படுத்திவிடும்.காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பால் அருந்தினால் அது செரிமானமாக வெகு நேரம் எடுத்துக் கொள்ளும்.
ஆயுர்வேத முறைப்படி காலை நேரத்தில் பால் குடிப்பது உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கச் செய்துவிடும்.காலை நேரத்தில் பால் குடிப்பது சருமப் பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும்.
காலையில் வெறும் வயிற்றில் பால் குடித்தால் சிலருக்கு வாந்தி குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.குறிப்பாக அல்சர்,வயிற்று வலி,அசிடிட்டி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் காலை நேரத்தில் பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.இல்லையென்றால் வாந்தி,தலைசுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இரவு நேரத்தில் பால் குடித்தால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது.
ஆயுர்வேத முறைப்படி நீங்கள் பாலில் உள்ள முழு ஊட்டச்சத்துக்களை பெற காலை நேரத்தில் பால் பருகாமல் மாலை அல்லது இரவு நேரத்தில் எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.