Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்களே உங்களுக்கு நகங்கள் அடிக்கடி உடைந்து விடுகிறதா??வலிமையான நீளமான நகங்களை பெற இதை செய்யுங்கள்!!

பெண்களே உங்களுக்கு நகங்கள் அடிக்கடி உடைந்து விடுகிறதா?? வலிமையான நீளமான நகங்களை பெற இதை செய்யுங்கள்!!

சில பெண்களுக்கு விரல் நகங்கள் அடிக்கடி வலிமை இல்லாத காரணத்தினால் உடைந்து விடுகிறது. இதனை தடுக்க சில வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக பெண்களின் கைகளில் உள்ள விரல்களுக்கு அழகு சேர்ப்பது அவர்களின் விரல்களில் உள்ள நீளமான நகங்கள் தான். இந்த நகங்கள் சில பெண்களுக்கு அப்படியே உடையாமல் நீளமாகவும் வலிமையாகவும் அழகாகவும் இருக்கும். சில பெண்களுக்கு நீளமாக நகங்கள் வளரும். ஆனால் அடிக்கடி உடைந்து விடும். சில பெண்களுக்கு நகங்கள் வளராமல் குட்டையாகவே இருக்கும். அவ்வாறு நகங்கள் குட்டையாக இருக்கும் பெண்களுக்கு நகங்கள் வலிமையாக நீளமாக வளரவும், பெண்களுக்கு அடிக்கடி நகங்கள் உடைந்து விடுவதை தடுப்பதற்கும் சில எளிமையான வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்.

நகங்களை உடையாமல் பாதுகாக்கவும் குட்டையாக இருக்கும் நகங்கள் வளரவும் சில வழிமுறைகள்…

* 1 ஸ்பூன் கடல் உப்பு எடுத்துக் கொள்ளவும். பிறகு 2 ஸ்பூன் கோதுமை முளை எண்ணெய்(Wheat Germ Oil) எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து பேஸ்டாக கலக்கி நகத்தை சுற்றியும் நகத்திற்கு மேலும் தேய்த்து 2 நிமடத்திற்கு மசாஜ் செய்து அதை 20 நிமிடங்களுக்கு ஊறவைத்து விடவும். பிறகு நகத்தை கழுவ வேண்டும். இதை வாரத்துக்கு மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* ஒரு ஸ்பூன் வாசிலின் எடுத்துக் கொள்ளவும். இதில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். பிறகு இதை பஞ்சினால் தொட்டு நகத்தில் அடிக்கடி தடவ வேண்டும்.

* ஒரு பூண்டு பல்லை எடுத்துக் கொள்ளவும். பின்னர் மூன்று ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து பூண்டு பல்லுடன் சேர்த்து தட்டி பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை நகங்களை சுற்றி தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இதை வாரம் மூன்று முறை செய்ய வேண்டும்.

* அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீரை அந்த பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். பிறகு இதில் மூன்று ஸ்பூன் குதிரை வாலியை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இந்த நீரை ஆறவிட்டு அதனுள் கை விரல்களை நினைத்து பத்து நிமிடங்கள் அப்படியே கை விரல்களை வைக்க வேண்டும். இந்த முறையை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என இரண்டு வாரங்கள் தொடர்ந்து செய்தால் நகங்கள் வலிமை பெற்று நன்கு வளர்ச்சி அடையும்.

* 4 ஸ்பூன் விளக்கெண்ணெயில் ஒரு ஸ்பூன் விட்டமின் ஈ மாத்திரையின் ஆயிலை கலந்து அதை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். பிறகு இந்த எண்ணெயை தினமும் இரண்டு வேளையில் நகங்களில் நெய்ல் பாலிஷ் போன்று தேய்க்க வேண்டும். இதனால் நகங்களுக்கு நல்ல வலிமை கிடைக்கும். உடையாமல் இருக்கும்.

 

 

 

 

 

 

Exit mobile version