Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இருமல் வந்தால் சிறுநீர் கசியுதா? சிறுநீரை கழிப்பதற்கு முன்னரே கசிகிறதா? இந்த ஒரு கசப்பு துவர்ப்பு காய் ஜூஸ் குடிங்க!!

சிறுநீர்ப் பையில் இருந்து தானாக சிறுநீர் கசிவு ஏற்பட்டால் அதை நிச்சயம் அலட்சியம் கொள்ளாமல் சரி செய்ய வேண்டும்.தற்பொழுது சிறுநீர் கசிவு பிரச்சனையால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.

சிறுநீர் கசிவு ஏற்படுவதற்கான காரணங்கள்:

*சிறுநீர் பாதை தொற்று
*சிறுநீரக கல் பாதிப்பு
*கர்ப்பம்
*உடல் பருமன்
*பாலியல் தொற்று
*மன அழுத்தம்
*தொடர் இருமல்
*நாள்பட்ட மலச்சிக்கல்

சிறுநீர் கசிவு அறிகுறிகள்:

*சிறுநீர் கழிக்கும் உணர்வின் வேகம் அதிகரித்தல்
*கட்டுப்படுத்த முடியாத சிறுநீர்
*அடிக்கடி சிறுநீர் கழித்தல்
*இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர் கசிவை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்:

தேவையான பொருட்கள்:-

1)கோவைக்காய் – ஒன்று
2)கொத்தவரங்காய் – ஐந்து
3)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு கோவைக்காயை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து நான்கு அல்லது ஐந்து கொத்தவரங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து இந்த இரண்டு காய்களையும் மிக்சர் ஜாரில் போட்டு ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு இந்த ஜூஸை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி காலையில் உணவிற்கு முன்பு பருக வேண்டும்.இந்த சாறை தொடர்ந்து பருகினால் சிறுநீரக கசிவு பிரச்சனை சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)பெரிய நெல்லிக்காய் – ஒன்று
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு பெரிய நெல்லிகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் விதைகளை மட்டும் நீக்கிவிட வேண்டும்.

**பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் காலை உணவிற்கு முன் பருகினால் சிறுநீர் கசிவு பிரச்சனை சரியாகும்.

**தர்பூசணி,வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகளவு எடுத்துக் கொள்ளலாம்.உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)பேக்கிங் சோடா – அரை தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெது வெதுப்பான பக்குவத்திற்கு சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

**பிறகு இந்த தண்ணீரை ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் அரை தேக்கரண்டி அளவு சோடா உப்பு போட்டு கலக்கி பருகினால் சிறுநீர் கசிவு ஏற்படுவது தடுக்கப்படும்.

Exit mobile version