நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பது பிடிக்குமா? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்!!

0
97
#image_title

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பது பிடிக்குமா? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்!!

இன்றைய கால வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டு விட்டது.ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.எதிலும் கலப்படம்,இரசாயனம் என்று ஒரு உணவு பொருளை உண்பதற்கே யோசிக்க வேண்டி இருக்கு.இதனால் நாம் பார்த்து பார்த்து ஆரோக்கியமான உணவை சமைத்து உண்பதில் அக்கறை காட்டி வருகிறோம்.இந்த அக்கறையை சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்களுக்கும் காட்டுகிறோமா? என்றால் கேள்விக்குறி தான்.காரணம் தற்பொழுது நம் சமயல் அறைகளில் உபயோகப்படுத்தி வரும் பெரும்பாலான பாத்திரங்களில் உடலுக்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல் கலக்கப்பட்டு இருக்கிறது.இது நம்மில் பலருக்கு தெரியவில்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.

தற்போதைய சூழலில் வித விதமான சமயல் பாத்திரங்கள் புழக்கத்தில் இருக்கிறது.இவை அனைத்தும் கண்ணை கவரும் விதமாகவும்,குறைந்த நேரத்தில் சமைக்கும் திறனை கொண்டிருப்பதால் மக்கள் இதனை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதற்கு பெயர் தான் ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது.

அப்படி உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் சமயல் பாத்திரம் நிறைய உருவாக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் அலுமிய பாத்திரங்கள்,நான்-ஸ்டிக் பாத்திரங்கள் என்று உடல் நலத்தை கெடுக்க வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கிறது.இதன் பயன்பாட்டை முற்றிலும் குறிப்பது என்பது சாத்தியமற்றது என்றாலும் நம்மில் ஒவ்வொருவரும் இதன் தீமையை உணர்ந்து நம் குடும்ப உறுப்பினர்களின் நலனைக் கருதி பயன்படுத்துவதை மெல்ல மெல்ல குறைத்து வந்தால் நல்லது.சரி இந்த வகை பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்கிறீர்கள்.அப்போ எந்த பாத்திரம் தான் சமையலுக்கு நல்லது? எதை தான் சமையலுக்கு பயன்படுத்துவது? என்ற கேள்வி உங்களில் பலருக்கு எழும்.

இதற்கு மாற்று தீர்வு எவை என்று சொல்தை விட நாம் இதற்கு முன் பயன்படுத்தி பின்னர் சோம்பேறி தனத்தால் ஒதுக்கிய பொருட்களை பயணப்படுத்துங்கள் என்று சொல்லலாம்.அதாவது நம் பார்மபரிய சமையல் பாத்திரங்களான இரும்பு,மண்,செம்பு,பித்தளை ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தலாம்.இதனால் உடலுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஒருபோதும் ஏற்படாது.சொல்லப்போனால் உடலுக்கு புது புது நன்மைகளை தான் அள்ளி தரும் இந்த வித பாத்திரங்கள்.

நான்-ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள்:-

*நான்-ஸ்டிக் பாத்திரங்களில் உணவு பொருட்கள் ஒட்டாமல் இருக்க பயன்படுத்தப்படும் இரசாயனம்,தண்ணீர் உறிஞ்சாமல் இருக்க பயன்படுத்தப்படும் பேப்ரிக்குகள்,நாம் சமைக்கும் உணவில் கொழுப்பு சத்துக்களை அதிகரித்து விடும்.இதனால் உடல் எடை,அதிகப்படியான கெட்ட கொழுப்பு என்று பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு நாம் ஆளாகி விடுவோம்.

*இந்த நான்-ஸ்டிக் பாத்திரங்களை அதிகம் பயன்படுத்தினால் தைராய்டு,புற்றுநோய்,உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

*இந்த நான்-ஸ்டிக் பொருட்களால் பெண்களின் உடலில் பெர் ஃப்ளோரா ஆக்டானிக் ஆசிட் அளவு உயர்ந்து ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறையும்.இதனால் மெனோபாஸ் விரைவில் நிகழ முக்கிய காரணமாக இந்த’வகை பாத்திரங்கள் விளங்குகிறது என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றன.

*அதேபோல் நான்-ஸ்டிக் பாத்திரங்களில்ன் கீறல் ஏற்பட்டால் அதில் இருந்து மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக்ஸ் நாம் சமைக்கும் உணவில் கலக்கலாம்.இதை உண்ணும்பொழுது நம் உடலில் நாளமில்லா சுரப்பிகள் சீர்குலைக்கும்.அதோடு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்,கருவுறுதல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.