சிக்கன் ஊறுகாய் பிடிக்குமா? அப்போ இந்த முறையில் செய்து பாருங்கள்.. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்!!

0
64
#image_title

சிக்கன் ஊறுகாய் பிடிக்குமா? அப்போ இந்த முறையில் செய்து பாருங்கள்.. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்!!

ஊறுகாய் என்ற பெயரை சொன்னதுமே நம்மில் பெரும்பாலானோருக்கு நாவில் எச்சில் ஊரும்.அதுவே சிக்கன் ஊறுகாய் என்றால் சொல்ல வார்த்தையே இல்லை.சிக்கனில் வறுவல்,பிரட்டல்,கிரேவி,குழம்பு,சில்லி என்று பல வகைகளில் சமைத்து ருசி பார்த்து வரும் நம்மில் பெரும்பாலானோருக்கு சிக்கனில் ஊறுகாய் செய்து சாப்பிட முடியும் என்று தெரிய வாய்ப்புகள் குறைவு.

தேவையான பொருட்கள்:-

*சிக்கன் – 1/2 கிலோ

*மஞ்சள் தூள் – 3/4 தேக்கரண்டி

*மிளகாய்த்தூள் – 8 தேக்கரண்டி

*இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி

*நல்லெண்ணெய் – 8 தேக்கரண்டி

*கடுகுத்தூள் – 1 தேக்கரண்டி

*வெந்தயத்தூள்- 1/2 தேக்கரண்டி

*எலுமிச்சைபழம் – 2 தேக்கரண்டி

*காய்ந்த மிளகாய் -5

*கறிவேப்பிலை – 2 கொத்து

*உப்பு – தேவையான அளவு

*எண்ணெய் – 1/4 லிட்டர்

செய்முறை:-

முதலில் ஒரு பெரிய பாத்திரம் எடுத்து கொள்ளவும்.அதில் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை போட்டு 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்,3 தேக்கரண்டி மிளகாய்த்தூள்,1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு கலந்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து அதில் 1/4 லிட்டர் எண்ணெய் ஊற்றவும்.அவை சூடேறியதும் அதில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து 4 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றவும்.அவை சூடேறியதும் 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 5 தேக்கரண்டி மிளகாய்த்தூள்,1 தேக்கரண்டி கடுகுத்தூள் மற்றும் 1/2 தேக்கரண்டி வெந்தயத்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.பின்னர் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து 4 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்.அவை சூடேறியதும் அதில் கடுகு 1/4 தேக்கரண்டி,வெந்தயம் சிறிதளவு,வர மிளகாய் மற்றும் 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.அடுத்து அதில் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

இந்த தாளிப்பை சிக்கனுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.இந்த கலவை நன்கு ஆறிய பின்னர் 2 தேக்கரண்டி எலுமிச்சை பழம் சாறு சேர்த்து கொள்ளவும்.இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து கொள்ளவும்.