உங்களுக்கு அடிக்கடி ஏப்பம் வருகிறதா? இரண்டு நிமிடத்தில் தீர்வு.. தண்ணீரில் இதை கலந்து குடிங்க!!

0
118
Do you often belch? Solution in two minutes.. Mix this with water and drink!!

உணவு உட்கொண்ட பிறகு ஏப்பம் வருவது இயல்பான ஒரு விஷயமாகும்.ஆனால் சிலருக்கு தொடர்ந்து ஏப்பம் வரக் கூடும்.புளித்த ஏப்பம்,அடிக்கடி ஏப்பம் வருதல்,அதிக சத்தத்துடன் ஏப்பம் வருதல் போன்றவை பொது இடங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.இதை சரி செய்ய இங்கு தரப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றலாம்.

தீர்வு 01:

1)எலுமிச்சம் பழச்சாறு
2)தண்ணீர்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி இரண்டு அல்லது மூன்று துளிகள் எலுமிச்சை சாறு கலக்கவும்.

இந்த நீரை தினமும் குடித்து வந்தால் புளித்த ஏப்பம்,அதிக சத்தத்துடன் ஏப்பம் வருதல்,அடிக்கடி ஏப்பம் விடுதல் போன்றவற்றிற்கு தீர்வு கிடைக்கும்.

தீர்வு 02:

1)சோம்பு
2)தண்ணீர்

பாத்திரம் ஒன்றில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் அடிக்கடி ஏப்பம் வருவது கட்டுப்படும்.

தீர்வு 03:

1)இஞ்சி
2)தண்ணீர்

ஒரு சிறிய இஞ்சி துண்டை தோல் நீக்கிவிட்டு துருவி வைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அடுத்து அதில் துருவிய இஞ்சியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் அடிக்கடி ஏப்பம் வருவது கட்டுப்படும்.

தீர்வு 04:

1)ஆரஞ்சு பழம்
2)தண்ணீர்

ஒரு ஆரஞ்சு பழத்தை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் ஏப்பப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.