இன்று பலர் கால் பிடிப்பு பிரச்சனையால் அவதியடைந்து வருகின்றனர்.நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல்,நீண்ட நேரம் நிற்பது போன்ற காரணங்களால் கால் தசைகளில் அழுத்தம் ஏற்பட்டு மரத்து போகிறது.
இதனால் சிறிது நேரத்திற்கு ஒருவித வலியை அனுபவிக்க நேரிடும்.உடலை அசைக்க முடியாத நிலை ஏற்படும்.ஒரு சில சமயம் உடலில் உணர்வு இல்லாமல் போகும்.இந்த பாதிப்பிற்கு என்ன காரணம் என்று தெரியாமல் பலரும் இதை அனுபவிக்கின்றனர்.
இதுபோன்று கால் பிடிப்பு ஏற்பட முக்கிய காரணம் உடலில் நீர் பற்றாக்குறை தான்.அது மட்டுமின்றி பொட்டாசியம்,வைட்டமின்கள் பற்றாக்குறையால் இந்த கால் பிடிப்பு ஏற்படுகிறது.
இந்த தசை பிடிப்பு சரியாக என்ன செய்ய வேண்டும்?
ஐஸ்கட்டியை தசைபிடிப்பு ஏற்பட்ட இடத்தில் வைத்து அழுத்தம் கொடுத்தால் சில நிமிடங்களில் அவை சரியாகும்.
தண்ணீரை சூடாக்கி தசைப்பிடிப்பு ஏற்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் அவை சீக்கிரம் சரியாகும்.
தூங்கும் சமையத்தில் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது என்றால் காலடியில் தலையணையை வைக்கவும்.
பச்சை காய்கறிகள்,நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்,பால்,முட்டை போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.தசைப்பிடிப்பு பிரச்சனை உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வீக்கம்,தோல் நிற மாற்றம் உள்ளிவற்றை கண்டால் உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.