Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடிக்கடி வயிறு வலிக்குதா? ஒரு கிளாஸ் தண்ணீரில் இதை ஊற்றி குடித்தால் வாழ்நாள் தீர்வு கிடைக்கும்!!

இந்த உலகில் தேனை காட்டிலும் சிறந்த மருந்து எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இயற்கை வழங்கும் பொருட்களில் ஒன்றான இனிப்பு சுவை மிகுந்த தேன் வயிற்றுப் பிரச்சனைகளை காக்கும் நண்பனாக திகழ்கிறது.

தேனில் புரக்டோஸ்,நீர்,குளுக்கோஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த தேன் சித்தா,ஆயுர்வேதா போன்ற மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

தேன் மகத்துவம்:

வயிற்று வலி

ஒரு கிளாஸ் வெது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் வயிற்று வலி பிரச்சனை சரியாகும்.

குடல் புண்

காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேன் பருகினால் குடல்புண் பிரச்சனை சரியாகும்.

செரிமானப் பிரச்சனை

ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு நறுக்கி வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து பருகினால் அஜீரணக் கோளாறு சரியாகும்.

வயிறு பிரச்சனை

மிளகு விதைகளை வறுத்து பொடித்து தேன் கலந்து காலை,மாலை நேரங்களில் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.

வறட்டு இருமல்

பெரிய நெல்லிக்காயை நறுக்கி தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் பிரச்சனை நீங்கும்.

நரம்பு தளர்ச்சி

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான பாலில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை சரியாகும்.

வயிற்றுப்போக்கு

அகத்தி கீரையை ஆவியில் வேகவைத்து அரைத்து சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு,அல்சர் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

சளி பிரச்சனை

துளசி இலைகளை அரைத்து சாறு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் சளி பிரச்சனை நீங்கும்.

Exit mobile version