குழந்தைகள் தங்கள் பள்ளி பருவ காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையாக ஞாபக மறதி இருக்கிறது.படித்தது ஞாபகத்திற்கு வரவில்லை என்றால் படிப்பின் மீதான நாட்டம் குறைந்துவிடும்.நம் படிப்பிற்கான அடையாளமே மதிப்பெண் தான்.வருடம் முழுவதும் படித்தும் இறுதி தேர்வை சரியாக எழுதவில்லை என்றால் கஷ்டமாகிவிடும்.
சிலர் இரவு பகல் பாராமல் படிப்பிற்காக நேரத்தை ஒத்துகின்றனர்.இருப்பினும் தேர்வின் போது மறந்து போவதால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.படித்தது மறக்காமல் இருக்க பல டெக்னிக்ஸ் கடைபிடிக்கப்படுகிறது.குழந்தைகளுக்கு மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் உணவுகளை தொடர்ந்து கொடுத்தால் அவர்களால் எளிதில் படித்ததை பதிய வைத்துக் கொள்ள முடியும்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்:
1)திராட்சை,ஆரஞ்சு போன்ற பழங்களை ஜூஸாக செய்து பருகி வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
2)வேர்க்கடலையை வறுத்து சாப்பிடக் கொடுத்தால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.
3)ஊறவைத்த பாதாமை தினமும் காலை நேரத்தில் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும்.
4)புரதம் நிறைந்த முட்டையை உணவாக செய்து கொடுத்தால் மூளையின் ஆரோக்கியம் மேம்படும்.வேகவைத்த முட்டை ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது.
5)மீன் உணவுகள் ஞாபக திறனை அதிகரிக்க உதவுகிறது.வால்நட்டை பொடித்து பாலில் கலந்து கொடுத்தால் குழந்தையின் ஞாபக திறன் அதிகரிக்கும்.
6)ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள் அறிவு வளர்ச்சிக்கு உதவும்.தினமும் ஒரு பச்சை வெண்டைக்காயை சாப்பிடக் கொடுக்கலாம்.
7)கீரை உணவுகளை அதிகளவு சாப்பிடக் கொடுக்க வேண்டும்.பல வண்ணக் காய்கறிகளை உணவாக செய்து கொடுக்கலாம்.
8)கொண்டைக்கடலை,உலர் பீன்ஸ் போன்றவற்றை ஊறவைத்து முளைகட்டிய பிறகு வேக வைத்து சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி அதிகரிக்கும்.
9)தினமும் ஒரு கப் ஓட்ஸ் உணவை குழந்தைக்கு கொடுத்தால் அவர்களின் மூளை சிறப்பாக செயல்படும்.ஓட்ஸில் உள்ள வைட்டமின் பி,ஈ ஊட்டச்சத்துக்கள் அறிவு வளர்ச்சியை அதிகரிக்கிறது.