Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தினமும் கொர் கொர்ன்னு குறட்டைவிட்டு தூங்குறீங்களா? இந்த டீ குடிங்க.. வாழ்நாளில் குறட்டையே வராது!!

உங்களில் பெரும்பாலானோர் குறட்டைவிட்டு தூங்கும் பழக்கத்தை கொண்டிருப்பீர்கள்.இந்த பாதிப்பில் இருந்து மீள்வது தான் தங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

குறட்டைக்கான காரணங்கள்:

*சுவாசப் பிரச்சனை
*உடல் பருமன்
*மூக்கடைப்பு
*சைனஸ்
*ஒவ்வாமை

குறட்டை பிரச்சனைக்கு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.இரண்டு நிமிடங்கள் வரை தண்ணீர் சூடாக வேண்டும்.ஆகவே அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும்.

**அதன் பிறகு வெந்தயம் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சூடாகி கொண்டிருக்கும் தண்ணீரில் போட்டு மேலும் இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும்.ஒன்றரை கிளாஸ் தண்ணீர் சுண்டி முக்கால் கிளாஸ் அளவு வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

**பிறகு இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி மிதமான சூட்டில் பருக வேண்டும்.தொடர்ந்து ஒரு மாதம் இரவு நேரத்தில் இந்த பானத்தை பருகி வந்தால் குறட்டை பாதிப்பில் இருந்து மீண்டுவிடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)ஏலக்காய் – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு ஏலக்காயை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.

**அதன் பிறகு இடித்த ஏலக்காயை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருக வேண்டும்.இப்படி செய்தால் குறட்டை தொல்லை அடியோடு ஒழியும்.

தேவையான பொருட்கள்:-

1)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

**தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிட்டு வந்தால் குறட்டை பிரச்சனை ஏற்படாது.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி – ஒரு பீஸ்
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – 150 மில்லி

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு பீஸ் இஞ்சியை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து இடித்த இஞ்சியை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

**இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் குறட்டை பாதிப்பில் இருந்து மீண்டுவிடலாம்.

Exit mobile version