உங்களுக்கு தூங்கும்பொழுது அதிக அளவு குறட்டை வருகின்றதா? இதனால்தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது!

0
174

உங்களுக்கு தூங்கும்பொழுது அதிக அளவு குறட்டை வருகின்றதா? இதனால்தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது!

நான் தினசரி உறங்கும் பொழுது குறட்டை ஏற்படுகிறது அவை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலமாக காணலாம்.

தற்போது உள்ள சூழலில் குறட்டை என்பது பெரியவர்களுக்கு வரக்கூடிய ஓர் பிரச்சினையாகும். ஆனால் தற்போது இளம் வயதில் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

இவை ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்றால் நாம் இரவு உறங்கும் பொழுது சுவாசிப்பாதை குறுகலான நிலையில் இருக்கும் அப்பொழுது மூச்சுக்காற்று செல்லும் பொழுது குறட்டை ஏற்படும்.

குறட்டை விடுவதற்கான காரணங்கள் மரபு வழியாகவும் ஏற்படும். அதிகப்படியான உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்படும் மற்றும் மூக்கடைப்பு, தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கும் இவ்வித பிரச்சனை ஏற்படும்.

குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் முடிவடையும் நாட்களில் இந்த பிரச்சனை ஏற்படும். அளவுக்கதிகமாக மது அருந்துவது, புகைப்பிடித்தல், தூக்கம் மாத்திரைகள் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்த பிரச்சனைகள் ஏற்படும்.

இரவு உறங்கும் பொழுது அதிகம் குறட்டை விடுபவர்கள் மறுநாள் காலையில் தலைவலி பிரச்சனை ஏற்படும். நாள் முழுவதும் சோர்வாக காணப்படுவார்கள் இவ்வித ஒரு குறட்டை விடும் பிரச்சனை சாதாரணமாக எடுத்துக் கொண்டால் நம் உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

மூளையில் பல விதமான பிரச்சனைகள் ஏற்படும். நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதனை மருத்துவரை அணுகி சரி செய்து கொள்வது நல்லதாகும்.