உடல் சூட்டினால் அவதியா? கவலை வேண்டாம்… உடல் சூட்டை போக்கும் சிறந்த வழிகள்..

0
139
#image_title

உடல் சூட்டினால் அவதியா? கவலை வேண்டாம்… உடல் சூட்டை போக்கும் சிறந்த வழிகள்..

ஒருவருக்கு உடல் சூடு ஏற்பட முக்கிய காரணமாக அமைவது நம்முடைய வாழ்க்கை முறை மாற்றம்தான். காலம் காலமாக நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்த அனைத்தையும் நாகரீகம் என்று சொல்லி அதை நாம் பின்பற்றாமல் மறந்து போய்விட்டோம்.

இதனால், விதமான பிரச்சனைகள் நம்மை தாக்குகிறது. உடலில் உண்டாகும் அதிகப்படியான உஷ்ணம் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

உடல் சூட்டினால் நம் உள்ளுறுப்புகளும் பாதிக்கப்படும். வயிறு, கண், சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் அதிகமாகும். சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி உண்டாகும். உடலில் பாகங்களில் கட்டிகள் தோன்றும்.

எனவே இந்த பிரச்சினைகளை தவிர்க்க நாம் உடலை சூட்டை தனித்து உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.

அன்றாடம் நம் உடல் மீது நாம் அக்கறை செலுத்த வேண்டும். அது ரொம்ப முக்கியம். வாரத்திற்கு ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தினசரி தலையில் எண்ணெய் வைக்க வேண்டும். அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். இரவில் சீக்கிரம் தூங்க வேண்டும். நம் உடலை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

சரி வாங்க… உடல் சூட்டின் அறிகுறி… அதை போக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம் –

உடல் சூடு அறிகுறி

தீராத தலைவலி

வயிற்று வலி

கண் எரிச்சல்

தலைமுடி உதிர்தல்

தோல் நோய் எற்ப்படுதல்

உடல் எடை குறைதல்

முகப்பரு எற்ப்படுதல்

சிறுநீரக பாதிப்பு

வழிமுறைகள்

உடல் சூட்டை தணிக்க வேண்டும் என்றால், முதலில் புழுக்கமான இடத்தை விட்டு நகர்ந்து காற்றோட்டம் இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும்.

எலுமிச்சை பழ ஜூஸ் அடிக்கடி குடிக்க வேண்டும். இப்படி செய்தால் உடல் சூடு தணியும்.

தினமும் தயிர், மோர், நெய் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

காபி, டீயில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்து குடித்தால் உடல் சூட்டை தணியும்.

உடல் சூடு தணிய ஊற வைத்த வெந்தயத்தை குடித்து வரலாம்.

தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும்.

உணவில் கீரைகளை சேர்த்து கொள்ள வேண்டும்.

பருத்தி, கைத்தறி உடைகளை உடுத்த வேண்டும்.

இளநீரை தினமும் குடித்து வரலாம்.

பழங்கள் மற்றும் பழச்சாறு அடிக்கடிக்கு குடிக்கலாம்.

தினமும் சீரகத் தண்ணீரை குடித்து வரலாம்.

வாரத்தில் 2 முறை கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி துவையல் சாப்பிடலாம்.

இரவு உறங்குவதற்கு முன் தொப்பிளில் 2 துளிகள் விளக்கெண்ணெய் வைத்து தூங்கினால் உடல் சூடு தணியும்.