Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கை கால்களில் அதிகளவு வியர்க்குதா!! சரிசெய்ய இதோ ஈஸி ரெமடி!! 

#image_title

கை கால்களில் அதிகளவு வியர்க்குதா!! சரிசெய்ய இதோ ஈஸி ரெமடி!!

வியர்வைக்கு காரணங்கள்

மத்திய நரம்புத் தொகுதியின் அதீதச் செயல்பாடு காரணமாக நரம்பு முடிவுகள் தூண்டப்பட்டு கை, கால் வியர்வைச் சுரப்பிகள் அதிகளவு வியர்வையை சுரக்கக்கூடும். பெண்களை விட ஆண்களுக்கே அதிக வியர்வை சுரப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. சில பல தூண்டல்களால் உடலில் அதிவியர்வை ஏற்படலாம். பெண்கள் பதட்ட நிலையை அடையும் போது இந்த கை கால்களில் வியர்வை உருவாகும்.

இதை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றி இங்கு காணலாம்.

இரும்புச்சத்து அதிகமாக உள்ள முருங்கைக்கீரை அகத்திக் கீரை போன்ற கீரை வகைகளை நம் அன்றாட வாழ்வில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதை குணப்படுத்துவதற்கான ஒரு மருந்தை பற்றி பார்க்கலாம்.

நாட்டு மருந்து கடைகளில் இருக்கும் இம்காப்ஸின் அய செந்தூரத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்.

அதேபோல அய காந்த செந்தூரத்தையும் ஒன்று வாங்கிக் கொள்ள வேண்டும்.

காலை உணவுக்குப் பின் அய செந்தூரத்தை அரிசி எடை அளவு உண்ண வேண்டும். அதேபோல இரவு தூங்குவதற்கு முன் அயர் காந்த செந்தூரத்தை சிறிதளவு உண்ண வேண்டும்.

இந்த இரண்டையும் கட்டாயமாக தேனில் கலந்து மட்டுமே உண்ண வேண்டும்.

இதை மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உள்ளங்கைகளில் உள்ளங் கால்களில் ஏற்படக்கூடிய வியர்வை நீங்கும்.

Exit mobile version