தலையில் வெள்ளை முடி இருந்தால் அது வயதான தோற்றத்தை கொடுப்பதோடு,முக அழகை கெடுத்துவிடும்.இந்த வெள்ளை முடியை கருமையாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை முயற்சிக்கவும்.
தேவையான பொருட்கள்:
1)நெல்லிக்காய் ஜூஸ் – 200 மில்லி
2)கரிய பவளம் – ஒரு துண்டு
செய்முறை:
10 பெரிய நெல்லிக்காயின் விதைகளை நீக்கி அதன் சதை பற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு துண்டு கரிய பவளத்தை நெல்லிக்காய் சாறில் சேர்த்து மூன்று மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
இவ்வாறு செய்தால் நேச்சுரல் ஹேர் டை தயாராகிவிடும்.இதை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து முடியை அலசவும்.இப்படி வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் வெள்ளை முடி அனைத்தும் கருமையாகும்.
தேவையான பொருட்கள்:
1)கடுக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
2)கறிவேப்பிலை பொடி – ஒரு தேக்கரண்டி
3)அவுரி இலை பொடி – ஒரு தேக்கரண்டி
4)ஹென்னா பொடி – ஒரு தேக்கரண்டி
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் கடுக்காய் பொடி ஒரு தேக்கரண்டி,கறிவேப்பிலை பொடி ஒரு தேக்கரண்டி,அவுரி இலை ஒரு பொடி,ஹென்னா பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து கலக்கவும்.பிறகு இதை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும்.
இப்படி வாரத்திற்கு இருமுறை தலைக்கு அப்ளை செய்து வந்தால் வெள்ளை முடி நிரந்தர கருமையாகும்.
தேவையான பொருட்கள்:
1)செம்பருத்தி பூ பொடி – ஒரு தேக்கரண்டி
2)மருதாணி பொடி – ஒரு தேக்கரண்டி
3)துளசி இலை – ஒரு தேக்கரண்டி
4)எலுமிச்சை பழம் – ஒன்று
செய்முறை:
ஒரு இரும்பு கடாயில் செம்பருத்தி பூ பொடி ஒரு தேக்கரண்டி,மருதாணி பொடி ஒரு தேக்கரண்டி,துளசி இலை பொடி ஒரு தேக்கரண்டி மற்றும் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து ஒரு இரவு முழுவதும் ஊறவிடவும்.
பிறகு இதை தலைக்கு அப்ளை செய்து 45 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும்.இப்படி செய்தால் தலையில் உள்ள வெள்ளை முடி அனைத்தும் கருமையாகும்.