வெள்ளை முடிக்கு அதிகம் டை யூஸ் பன்றீங்களா!!! அப்போ இந்த பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு ஏற்படும்!!!

0
104
#image_title
வெள்ளை முடிக்கு அதிகம் டை யூஸ் பன்றீங்களா!!! அப்போ இந்த பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு ஏற்படும்!!!
நம்மில் பலர் வெள்ளை முடி வந்துவிட்டால் அதை கருப்பாக மாற்றுவதற்கு செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஹேர் டை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். இந்த செயற்கை ஹேர் டையை தொடர்ந்து பயன்படுத்துவதால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நமது தலையில் பொதுவாக அனைவருக்கும் இல்லை. சிலருக்கு வெள்ளை முடி என்பது இருக்கும். இந்த வெள்ளை முடி நம் தலையில் லெமனின் என்ற மூலக்கூறு குறைவதால் தான். பொதுவாக 40 வயது தொடங்கும் பொழுது சிலருக்கு லெமனின் மூலக்கூறு சுரப்பது குறையத் தொடங்கும்.
நமக்கு நரை முடி என்று அழைக்கப்படும் வெள்ளை முடி ஏற்படுவது உடலில் சத்து குறைபாடு காரணமாகத்தான். இதை மறைக்க நாம் இயற்கைய்ன மருத்துவ முறைகளை பின்பற்றாமல் செயற்கையான ஹேர் டைகளை பயன்படுத்தி வருகிறோம். இதனால் என்ன பாதிப்பு வருகிறது என்பது பற்றி பார்க்கலாம்.
நரை முடிக்கு ஹேர் டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்…
* நரை முடியை மறைப்பதற்கு நாம் தொடர்ந்து ஹேர் டை பயன்படுத்தும் பொழுது நம்முடைய சருமத்திற்கு பாதிப்புகள் ஏற்படுகின்றது. சருமம் சிவந்து தடிப்புகள் ஏற்படுகின்றது.
* நரை முடியை மறைப்பதற்கு தொடர்ந்து நாம் செயற்கையான ஹேர் டை பயன்படுத்துவதால் கண் எரிச்சல் போன்ற கண் தொடர்பான பிரச்சனைகளை கொண்டு வரும்.
* தரமற்ற ஹேர் டைகளை பயன்படுத்துவதால் நமக்கு புற்று நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றது.
* நாம் நரை முடியை மறைப்பதற்கு ஹேர் டையை தலையில் அடிக்கின்றோம். ஆனால் அவ்வாறு தலைக்கு அடிக்கும் பொழுது தலையின் சருமத்தின் வழியாக இந்த ஹேர் டை இரத்தத்தில் கலக்கின்றது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
* நாம் நரை முடியை மறைப்பதற்கு ஹேர் டை பயன்படுத்தும் பொழுது நமக்கு வயிற்று வலி போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை கொண்டு வரும்.
இதை தடுக்க ஒரே வழி நாம் செயற்கையான ஹேர் டைகளை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு இயற்கையான முறையில் ஹேர் டை தயாரிக்கும் முறைகளை பயன்படுத்தி இயற்கையான ஹேர் டைகளை தயாரித்து நரை முடிக்கு பயன்படுத்தலாம். நரை முடியை வரவிடாமல் தடுக்கும் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.