கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவாக இருக்க வேண்டுமா!!  அப்போ வேப்பிலையை இப்படி பயன்படுத்துங்க!!

0
94

கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவாக இருக்க வேண்டுமா!!  அப்போ வேப்பிலையை இப்படி பயன்படுத்துங்க!!

நமது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்து சருமத்தை பொலிவாகவும் பளபளப்பாகவும் மாற்றுவதற்கு வேப்பிலையை வைத்து எவ்வாறு பேஷியல் செய்வது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.

வேப்பிலையில் நிறையச் சத்துக்கள் உள்ளது. பொதுவாக வேப்பிலை கிருமி நாசினியாக பயன்படுகின்றது. வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு விதமான நோய்க்கு பயன்படுகின்றது. அந்த வகையகல் வேப்பிலையை நாம் பொடியாக செய்து அதை நமது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்ய பயன்படுத்தலாம்.

வேப்பிலை பொடியை பயன்படுத்தி பேஷியல் செய்து முகத்தில் தேய்த்து பின்னர் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், முகப்பருக்களையும் மறையச் செய்யலாம். இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மூன்று முறைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து செய்ய வேண்டும்.

அந்த மூன்று முறைகள்…

* பேஸ் டீம்
* பேஸ் ஸ்க்ரப்
* பேஸ் பேக்

பேஸ் டீம் செய்யத் தேவையான பொருள்கள்…

* எலுமிச்சம் பழத்தோல்
* சூடான தண்ணீர்

பேஸ் டீம் செய்முறை…

எலுமிச்சம் பழத்தோலை ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் ஒரு அகண்ட பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் 300 மிலி சூடான தண்ணீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் இருந்து வரும் ஆவியில் நம் முகத்தை ஐந்து நிமிடம் வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் எலுமிச்சம் பழத் தோலில் உள்ள கிருமி நாசினி நம் முகத்தில் உள்ள துளைகளை திறந்து அதில் உள்ள கிருமிகள், அழுக்குகளை நீக்க உதுவகின்றது. பின்னர் இதற்கு பிறகு பேஸ் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

பேஸ் ஸ்க்ரப் செய்ய தேவையான பொருள்கள்…

* கற்றாலை ஜெல்
* அரிசி மாவு
* எலுமிச்சம் பழச்சாறு

பேஸ் ஸ்க்ரப் செய்யும் முறை…

கற்றாலை எடுத்து அதில் இருக்கும் ஜெல்லை எடுத்து அதன் பிறகு இந்த ஜெல்லை மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து இன்னொரு பவுலை எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவு அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் அரை எலுமிச்சம் பழத்தை எடுத்து அதன் சாறை இந்த அரிசி மாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தயார் செய்து வைத்துள்ள கற்றாழை ஜூசை இதில் சேர்த்து பேஸ்ட் போல தயாரித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த பேஸ்டை முகத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஐந்து நிமிடம் முகத்தை மசாஜ் செய்து பின்னர் முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி விடும். கடைசியாக நாம் வேப்பிலை பேஸ் பேக் செய்ய வேண்டும்.

பேஸ் பேக் செய்ய தேவையான பொருள்கள்…

* வேப்பிலை பொடி
* கற்றாழை ஜூஸ்

பேஸ் பேக் செய்யும் முறை…

ஒரு பவுலை எடுத்துக் கொண்டு இதில் இரண்டு ஸ்பூன் வேப்பிலை பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தயார் செய்து வைத்துள்ள கற்றாழை ஜூசை இதில் சேர்த்து போஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும்.

இந்த வேப்பிலை பேஸ்டை எடுத்து முகத்தில் பேக் போல தேய்த்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ் பேக் நன்றாக காய்ந்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடலாம். இவ்வாறு.செய்வதன் மூலமாக நம் முகத்தில் இருக்கும் கிருமிகள் அனைத்தும் அழிந்து கரும்புள்ளிகள் அனைத்தும் மறைந்து நம் முகம் பொலிவுடனும் பளபளப்பாகவும் இருக்கும்.