Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மண்டையை பிளக்கும் வெயிலிலும் குளுகுளுனு இருக்க வேண்டுமா? அப்போ இதை சம்மரில் செய்யுங்கள்!!

கடந்த வருடத்தை விட இந்த கோடை காலம் கொளுத்தி எடுக்கப் போகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை தான்.மாசி மாதத்திலேயே பகல் நேரத்தில் வெளியில் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.இனி வரும் காலங்களில் வெயின் தாக்கத்தை நினைத்தால் ஒருவித கலக்கம் ஏற்படத் தொடங்குகிறது.

எப்படியாக இருந்தாலும் நாம் இந்த வெயில் காலத்தை கடந்து தான் ஆகவேண்டும்.ஆகவே இந்த கோடை காலத்தில் உடல் உஷ்ணம் ஏற்படாமல் இருக்கவும்,கோடை நோய்கள் உடலை அண்டாமல் இருக்கவும் இப்பொழுது இருந்தே இயற்கை பானங்கள் செய்து பருகுங்கள்.நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்,காய்கறிகளை தினசரி உணவாக்கி கொள்ளுங்கள்.

கோடை நோய்களை விரட்டும் பானம்:

தேவையான பொருட்கள்:-

1)பசு மோர் – ஒரு கப்
2)கொத்தமல்லி தழை – சிறிதளவு
3)சீரகம் – 1/4 தேக்கரண்டி
4)கறிவேப்பிலை – ஒரு கொத்து
5)உப்பு – சிறிதளவு
6)பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

**முதலில் கெட்டியான பசுந் தயிர் கால் கப் அளவிற்கு எடுத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி மோர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

**அதன் பிறகு மோரை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிவிடுங்கள்.அடுத்து சிறிதளவு கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

**அதன் பின்னர் கால் தேக்கரண்டி சீரகத்தை அதில் கொட்டி மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

**பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சிட்டிகை அளவு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.இதில் வெந்தயத் தூளும் சேர்த்துக் கொள்ளலாம்.இந்த மோரை குடித்தால் உடல் உஷ்ணமாவது தடுக்கப்படும்.அதேபோல் மோரில் உள்ள நல்ல பாக்டீரியா வயிற்றுப்போக்கு,செரிமானப் பிரச்சனை,அல்சர் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

சிலர் இஞ்சி,பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து பருகுவார்கள்.அல்சர்,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இந்த பொருட்களை ஸ்கிப் செய்துவிட வேண்டும்.

Exit mobile version