Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செறியாமை குடற்புண்கள் உடனடியாக சரியாக வேண்டுமா!! இந்த 5 பொருட்கள் மட்டும் போதும்!!

செறியாமை குடற்புண்கள் உடனடியாக சரியாக வேண்டுமா!! இந்த 5 பொருட்கள் மட்டும் போதும்!!

இந்த பதிவில் செறியாமை வயிறு ஊதல் குடற் புண்கள் போன்ற பல்வேறுபட்ட உபாதைகளை சரி செய்யக்கூடிய ஒரு இயற்கை மருந்தை இங்கு தெரிந்து கொள்வோம். நம் உண்ணக்கூடிய உணவு சரியாக செரிமானம் ஆனால் வயிறு ஊதல் செறியாமை குடற்புண்கள் ஆகியவை எதுவுமே ஏற்படாது.

இந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் உண்ணக்கூடிய உணவு செரிமானம் ஆகாமல் இருப்பது தான். இதனால் போசனை குறைபாடுகள், மந்த புத்தி, உடல் சோர்வு போன்ற ஏராளமான பிரச்சனைகள் உடம்பில் ஏற்படுகிறது.

எனவே இந்த பிரச்சினையை தடுக்கக்கூடிய ஒரு இயற்கையான மருந்தை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
சுக்கு
மிளகு
திப்பிலி
ஏலக்காய்
சீரகம்

செய்முறை:
சுக்கு மிளகு திப்பிலி ஏலக்காய் சீரகம் ஐந்தையும் சம அளவு எடுத்துக் கொண்டு தனித்தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்துக் கொள்ளவும். மிதமான சூட்டில் மூன்று நிமிடங்களுக்கு பொருட்கள் எதுவும் கருகாமல் சிறிதளவு மட்டும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வருத்தப்பிறகு ஒவ்வொன்றையும் நன்றாக பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அனைத்தையும் ஒன்றாக ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

இவ்வாறு செய்த இந்த பொடியை தினமும் இரண்டு வேளை வளர்ந்தவர்கள் 5 கிராம் எடுத்து அதனுடன் சர்க்கரை பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வர தெரியாமை வயிறு ஊதல் அனைத்தும் உடனடியாக சரியாகிவிடும்.

அதேபோல் மூன்று வயதிலிருந்து பத்து வயது உள்ள குழந்தைகளுக்கு இந்த பொடியில் 2.5 கிராம் எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் அல்லது சீனி சேர்த்து இருவேளைகளுக்கு கொடுக்க வேண்டும்.இந்த பொடியை மூன்று வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது.

இவ்வாறு சுக்கு மிளகு திப்பிலி ஏலக்காய் சீரகம் என்ற ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பொடியானது உடலில் ஏற்படக்கூடிய வயிறு ஊதல் குடற்புண் செரிமான கோளாறு மலச்சிக்கல் போன்ற ஏராளமான பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய சக்தி வாய்ந்தது.

Exit mobile version