Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

படுத்தி எடுக்கும் மூட்டு வலியில் இருந்து விடுதலை வேண்டுமா..? அப்போ இதை இரவில் அங்கு தடவுங்கள்..!!

#image_title

படுத்தி எடுக்கும் மூட்டு வலியில் இருந்து விடுதலை வேண்டுமா..? அப்போ இதை இரவில் அங்கு தடவுங்கள்..!!

மூட்டு எலும்பின் நடுவில் தேய்மானம் உண்டாகும் போது வலி உண்டாக்க கூடும். இவை வயதானவர்களுக்கு ஏற்படும் பாதிப்பாக முன்பு இருந்த நிலையில் தற்பொழுது ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் வயதானவர்களை காட்டிலும் இளவயதினரை பாதிக்கும் நோயாக உருவெடுத்து வருகிறது. இந்த மூட்டு வலிக்கு வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்து கொள்வதால் தற்காலிகமாக வலி குறையுமே தவிர அவை நிரந்தர தீர்வாக இருக்காது. இதற்கு இயற்கை வைத்தியத்தை மேற்கொள்வதே சிறந்த தீர்வாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*விளக்கெண்ணெய் – 100 மில்லி

*கடுகு எண்ணெய் – 100 மில்லி

*நல்லெண்ணெய் – 100 மில்லி

*தேங்காயெண்ணெய் – 50 மில்லி

*வேப்ப எண்ணெய் – 50 மில்லி

*குப்பைமேனி இலை – 1 கைப்பிடி

*உத்தாமணி இலை – 1 கைப்பிடி

*அஸ்வகந்தா இலை – 1 கைப்பிடி

*நொச்சி இலை – 1 கைப்பிடி

*முடக்கத்தான் கீரை – 1 கைப்பிடி

*பிரண்டை தண்டுகள் – 1 கைப்பிடி அளவு

செய்முறை…

முதலில் குப்பைமேனி இலை, அஸ்வகந்தா இலை, முடக்கத்தான் கீரை, பிரண்டை தண்டுகள், உத்தாமணி இலை, நொச்சி இலை ஆகியவற்றை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உலர்திக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அதில் வேப்ப எண்ணெய் 50 மில்லி, தேங்காய் எண்ணெய் 50 மில்லி, நல்லெண்ணெய் 100 மில்லி, கடுகு எண்ணெய் 100 மில்லி மற்றும் விளக்கெண்ணெய் 100 மில்லி ஊற்றி சூடு படுத்தவும். பின்னர் உலர்த்தி வைத்துள்ள இலைகளை சேர்த்து மிதமான தீயில் நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.

இந்த எண்ணெயில் ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சேமிக்கவும். இந்த மூலிகை எண்ணெயை இரவு தூங்கச் செல்வதற்கு முன் மூட்டுகளின் மேல் அப்ளை செய்து வந்தால் விரைவில் வலி குணமாகும்.

Exit mobile version