உங்கள் தலையில் தென்படும் வெள்ளை முடிகள் இயற்கையான முறையில் கருமையாக வேண்டுமா? அப்போ ஆரஞ்சு பழ தோலை இப்படி யூஸ் பண்ணுங்கள்!
தலையில் இருக்கின்ற வெள்ளை முடியை இரசாயன ஹேர் டை பயன்படுத்தி கருமையாக மாற்றுவதை விட இயற்கையான பொருட்களை கொண்டு வெள்ளை முடியை கருப்பாக்குவது நல்லது.
இதற்கு ஆரஞ்சு பழ தோலை பொடி ஹேர் டை போல் பயன்படுத்தி வரலாம்.ஆரஞ்சு பழ தோலில் வைட்டமின் சி சத்து நிறைந்து இருக்கிறது.இவை பொடுகு,வெள்ளை முடி,வறண்ட முடி உள்ளிட்ட பிரச்னைகளை சரி செய்ய உதவுகிறது.
தேவையான பொருட்கள்:-
1)ஆரஞ்சு தோல் – 1 கப்
2)கற்றாழை ஜெல் – 1/4 கப்
3)கறிவேப்பிலை – 1/2 கப்
4)தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் ஒரு கப் ஆரஞ்சு பழ தோலை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
அதேபோல் 1/2 கப் கறிவேப்பிலையை நன்கு காய வைத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு ஒரு கிண்ணம் எடுத்து அதில் அரைத்த ஆரஞ்சு பழ தோல் 3 தேக்கரண்டி சேர்க்கவும்.அதன் பின்னர் கறிவேப்பிலை பொடி 3 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பிறகு ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.இதை ஆரஞ்சு பழ பொடி + கருவேப்பிலை பொடி கிண்ணத்தில் போட்டு நன்கு கலந்து விடவும்.
பிறகு 3 தேக்கரண்டிசுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்துக் கொள்ளவும்.இதை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீர் பயன்படுத்தி அலசினால் முடி பளபளப்பாகவும்,கருமையாகவும் மாறும்.
அதேபோல் ஆரஞ்சு பழ பொடியை தயிரில் போட்டு கலக்கி ஹேர் டை போல் தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலைமுடி அனைத்தும் அடர் கருமையாக மாறும்.தீராத பொடுகு பாதிப்பை முழுமையாக சரி செய்ய உதவும்.
ஆரஞ்சு பழ பொடியில் சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்த்து குழைத்து தலைக்கு அப்ளை செய்தால் மெல்லிய முடி அடர்த்தி பெறும்.வெறும் ஆரஞ்சு பழ தோல் பொடியை நீரில் குழைத்து தலை முழுவதும் தடவி வந்தால் முடி பளபளப்பாக மாறும்.