Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் பாசிட்டிவாக இருக்க வேண்டுமா..?? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!!

1. இயற்கையுடன் நேரம் செலவிடுதல்:

காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரையிலும் நமது அதிகப்படியான நேரம் என்பது திரைகளின் மீது தான் உள்ளது. இதனால்தான் இயற்கையில் இருந்து நாம் வெகு தூரம் விலகி வந்து விட்டோம். ஒரு மனிதனுடைய மூளை மற்றும் உடல் ஆகிய இரண்டும் எப்பொழுது இயற்கையுடன் இணைந்து இருக்கிறதோ, அப்பொழுது மட்டும்தான் அந்த மனிதன் புத்துணர்ச்சியை பெறுவான்.

நமது மூளை மற்றும் உடலுக்கு சார்ஜ் ஏற்றுவதே இந்த இயற்கை தான். எனவே நம்முடைய நேரத்தை இயற்கையுடன் செலவிட முயற்சிக்க வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில் இது மிகவும் கடினமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. எனவே முடிந்த அளவிற்கு நம்முடைய நேரத்தை இயற்கையுடன் செலவிட முயற்சிக்க வேண்டும்.

சரியான அளவு சூரிய ஒளி நமது உடலில் படவில்லை என்றால் விட்டமின் D குறைபாடு ஏற்படும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இந்த விட்டமின் குறைபாட்டால் Stress,Anxiety,Depression போன்ற பிரச்சினைகளையும் நமது உடம்பில் ஏற்படுத்தும் என்பதை பலரும் அறியாமல் இருக்கின்றோம். எனவேதான் சூரிய ஒளி என்பது உடல் மற்றும் மனதிற்கும் மிகவும் தேவையான ஒன்றாகும்.

எனது சூரிய ஒளி மற்றும் நிலவின் ஒளியில் நேரம் செலவிடுவதை பழகிக் கொள்ளுங்கள். வீட்டின் மொட்டை மாடியில் குடும்பத்துடன் சேர்ந்து நிலவின் ஒளியை காணும் பொழுது குடும்பம் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

2. ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுதல்:

நமது நேரத்தை பெரும்பாலும் மற்றவர்கள் செல்போனில் போடக்கூடிய கன்டென்ட் களை பார்ப்பதற்காகவே செலவிடுகிறோம். ஆனால் அவ்வாறு மற்றவர்கள் உருவாக்குவதை நாம் பார்ப்பதை தவிர்த்து, நமக்கு தெரிந்த கவிதை எழுதுவது, கட்டுரை எழுதுவது, டைலரிங், தோட்டக்கலை, டிராயிங் இது போன்றவைகளை நாமாக உருவாக்க பழகிக் கொள்ள வேண்டும்.

மற்றவர்கள் செய்வதை பார்த்துக் கொண்டே இருப்பதை விட, நாம் புதியதாக ஏதேனும் ஒன்றை உருவாக்க வேண்டும். நமது மனம் மற்றும் மூளையை எப்பொழுதும் ஆக்டிவாக வைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களது பாராட்டுகளையும், கைதட்டல்களையும் பெற வேண்டும் என எண்ணாமல், நமது மன திருப்திக்காக நமக்குத் தெரிந்ததை புதிதாக உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

3. மூச்சை நிதானப்படுத்துங்கள்:

நீங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் அல்லது நெகட்டிவ் ஆக உணர்ந்து கொண்டிருக்கும் பொழுது உங்களது மூச்சானது மிகவும் சிறியதாக இருக்கும், அதாவது ஆழமான மூச்சாக இருக்காது. நீங்கள் எப்பொழுது ஸ்ட்ரெஸ் ஆக இருக்கிறீர்களோ அப்பொழுது உங்களது மூச்சை கவனிக்க வேண்டும்.

அதாவது மூச்சை வயிறு வரை இழுத்துச் சென்று வெளியே விட வேண்டும். நாம் விடக்கூடிய மூச்சானது ஆழ்ந்த மூச்சாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது உங்களது பாதி மன அழுத்தம் குறைந்து விடும். இவ்வாறு உங்களது உடல் சிறிது மன அழுத்தத்தில் இருந்து வெளிவந்த பிறகு, உங்களது மூளையும் அந்த பிரச்சனையில் இருந்து வெளிவர தொடங்கி விடும்.

4. தொண்டு செய்யுங்கள்:

நாம் நெகட்டிவ் ஆக யோசிப்பதற்கு காரணம் நாம் நம்மை பற்றி மட்டும் யோசிப்பதனால் தான். மற்றவர்கள் நம்மை குறை கூறி விட்டார்கள், நாம் நினைத்தது நடக்கவில்லை என்று தொடர்ந்து நம்மைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டு இருப்பதால்தான் நெகட்டிவ் திங்கிங் நமக்குள் வந்துவிடுகிறது.

எனவே உங்களைக் குறித்த எண்ணங்களை மாற்றி விட்டு மற்றவர்களை குறித்தும் யோசிக்க தொடங்க வேண்டும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தொடங்க வேண்டும். உங்களை சுற்றி உதவி தேவைப்படுவோர் நிறைய பேர் இருப்பார்கள், அவர்களுக்கு நீங்களாகவே சென்று உதவிகளை செய்யலாம். அப்படி இல்லை என்றால் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய ஆர்கனைசேஷன் உடன் இணைந்தும் தொண்டுகளை செய்யலாம்.

Exit mobile version