இந்தியாவில் இருக்கக்கூடிய அனைவருக்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. வங்கியின் கணக்கு திறப்பது முதல் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு செல்போன் எண்களை பெறுவதற்கு அதாவது புதிய சிம் கார்டுகளை வாங்குவதற்கு என அனைத்திற்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட ஆதாரத்தையும் விவரங்களை மாற்றுவதற்கு சில வரம்புகளை UIDAI நிர்ணயம் செய்திருக்கிறது. அவை பின்வருமாறு :-
✓ மொபைல் எண் – எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதி
✓ வீட்டு முகவரி – எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதி
✓ பெயர் மாற்றம் – 2 முறை மட்டுமே மாற்றி கொள்ள முடியும்
✓ பிறந்த தேதி – 1 முறை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும்
இது போன்ற மாற்றங்களை ஆதார் அட்டையில் மேற்கொள்வதற்கு பாஸ்போர்ட் அல்லது பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும். அவ்வாறு சமர்ப்பித்து அதன் பின் அதாரட்டையில் உங்களுக்கு திருத்தம் செய்ய வேண்டிய பகுதியை திருத்தம் செய்து கொள்ளலாம்.
மொபைல் எண் மற்றும் முகவரியை மாற்ற மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் :-
✓ மை ஆதார் போர்டு அல்லது மை ஆதார் செயலிக்கு செல்ல வேண்டும்
✓ அங்கு updatedocument என்பதன் உள் நுழைந்து உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
குறிப்பு :-
வருகிற ஜூன் 14ஆம் தேதி வரை மட்டுமே இலவசமாக இந்த சேவைகளை மேற்கொள்ள முடியும் என்று தனிநபர் ஆதார் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.