Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இந்த அறிகுறிகள் மற்றும் தீர்வை தெரிந்து கொள்ளுங்கள்!!

உலகளவில் பலரும் சந்தித்து வரும் ஒரு பெரிய உடல் பிரச்சனையாக சர்க்கரை நோய் உள்ளது.தற்பொழுது உலக மக்களை உலுக்கி கொண்டிருக்கும் நோய் பாதிப்பாக இது திகழ்கிறது.இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் அதிகளவு உருவாகி வருகின்றனர்.இதற்கு நாம் பின்பற்றி வரும் உணவுப்பழக்கம் காரணமாக சொல்லப்படுகிறது.

சர்க்கரை நோய்:

நமது உடலில் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரை உடலால் உறிஞ்ச முடியாமல் போவதை தான் சர்க்கரை அதாவது நீரிழிவு நோய் என்கிறோம்.உடலில் இன்சுலின் ஓட்டம் நிற்கும் பொழுது குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு 100 mg/dL க்கு குறைவாக இருக்கும் பொழுது நீரிழிவு நோய் வரக் கூடும்.

சர்க்கரை நோய் வகைகள்:

1)டைப் 1 நீரிழிவு
2)டைப் 2 நீரிழிவு
3)கர்ப்பகால நீரிழிவு

சர்க்கரை நோய் அறிகுறிகள்:

**அடிக்கடி சிறுநீர் கழித்தல்
**இனிப்பு மீதான ஆசை அதிகரித்தல்
**வழக்கத்தை விட அதிக பசி உணர்வு
**திடீர் எடை குறைதல்
**உடல் சோர்வு
**அதிக தண்ணீர் தாகம் எடுத்தல்
**தொப்பை கொழுப்பு வேகமாக அதிகரித்தல்
**காயங்கள் குணமாக அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளுதல்
**தோல் தொற்று
**தோல் கருமை
**கழுத்து,அக்குள் மற்றும் தொடை பகுதி அதிக கருமை நிறத்தில் காணப்படுதல்

டைப் 1 நீரிழிவு நோய்:

இது இளம் பருவ நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது.இதில் கணைய இன்சுலின் உற்பத்தி செய்யாது.

டைப் 2 நீரிழிவு நோய்:

இந்த வகை நீரிழிவு நோய் ஏற்பட்டால் இரத்த குளுக்கோஸ் பராமரிக்க போதிய இன்சுலின் உருவாக்க முடியாது.

கர்ப்பகால நீரிழிவு நோய்:

இது கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படக் கூடிய நீரிழிவு நோயாகும்.நீரிழிவு நோய் இல்லாத பெண்களும் கர்ப்ப காலத்தில் இந்த பாதிப்பை சந்திக்கின்றனர்.ஆனால் பிரசவத்திற்கு பிறகு இந்த பாதிப்பில் இருந்து அவர்களால் மீண்டுவிட முடியும்.

நீரிழிவு நோய்க்கான காரணங்கள்:

*குடும்ப வரலாறு
*உடல் பருமன்
*உட்கார்ந்த வாழ்க்கை முறை
*கணைய நோய்
*PCOD

ஆண்களுக்கான நீரிழிவு நோய் அறிகுறி:

**திடீர் உடல் எடை இழப்பு
**அதிக உடல் சோர்வு
**மங்கலான கண் பார்வை
**அடிக்கடி சிறுநீர் வெளியேற்றும் உணர்வு
**தண்ணீர் தாகம் அதிகரித்தல்

பெண்களுக்கான நீரிழிவு நோய் அறிகுறி:

**யோனி பகுதியில் ஈஸ்ட் தொற்று
**சிறுநீர் பாதை தொற்று
**கருப்பை நோய்

இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

Exit mobile version