ஆண் மற்றும் பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் அதிகளவு வியர்வை மற்றும் பாக்டீரியாக்கள் உருவாகி கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுகிறது.தினமும் 2 முறைக்கு மேல் குளித்தாலும் பிறப்புறுப்பு துர்நாற்றம் மட்டும் நீங்கியபாடில்லை என்று வருந்துபவர்கள் ஏராளம்.
பிறப்புறுப்பு பகுதியில் வீசும் கெட்ட வாடை நீங்க கிழ்கண்ட குறிப்புகளில் ஒன்றை தினந்தோறும் செய்து வரவும்.
1)தயிர் – ஒரு தேக்கரண்டி
2)வேப்பிலை – இரண்டு கொத்து
இந்த இரண்டு பொருட்களும் பிறப்புறுப்பு பகுதியில் உருவாகும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.
இரண்டு கொத்து வேப்பிலையை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து தயிர் கலந்து பிறப்புறுப்பு பகுதியில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் துர்நாற்றம் வராமல் இருக்கும்.
1)தயிர் – ஒரு தேக்கரண்டி
2)கஸ்தூரி மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
கிண்ணத்தில் பிரஸ் தயிர் மற்றும் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.பிறகு இதை பிறப்புறுப்பு பகுதியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் குளித்தால் கெட்ட வாடை வீசுவது கட்டுப்படும்.
1)வெற்றிலை – ஒன்று
2)வேப்பிலை – இரண்டு கொத்து
மிக்சர் ஜாரில் வேப்பிலை மற்றும் வெற்றிலை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அந்தரங்க பகுதியில் பூசி குளித்தால் கடும் துர்நாற்றம் அகலும்.
1)பூண்டு – இரண்டு பல்
2)பன்னீர் – ஒரு தேக்கரண்டி
முதலில் இரண்டு பல் பூண்டை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு தேக்கரண்டி பன்னீரை பூண்டு சாறில் கலந்து பிறப்புறுப்பு பகுதியில் அப்ளை செய்தால் துர்நாற்றம் கட்டுப்படும்.
1)பேக்கிங் சோடா – ஒரு தேக்கரண்டி
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
கிண்ணம் ஒன்றில் பேக்கிங் சோடா ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
பிறகு இதை பிறப்புறுப்பு பகுதியில் அப்ளை தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் கெட்ட வாடை நீங்கும்.