தர்ம சங்கடமான வாயு தொல்லையை மூன்றே நாட்களில் போக்க வேண்டுமா? இதோ எளிய வீட்டு வைத்தியம்! 

0
207
#image_title

தர்ம சங்கடமான வாயு தொல்லையை மூன்றே நாட்களில் போக்க வேண்டுமா? இதோ எளிய வீட்டு வைத்தியம்! 

வாயு தொல்லை பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று. இது பொது இடங்களில் சில சமயங்களில் சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தும். இத்தகைய வாயு தொல்லையை மூன்றே நாட்களில் நீக்கும் எளிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: 

1. இஞ்சி-  ஒரு சிறிய துண்டு

** இஞ்சி பசியை போக்கும். உமிழ் நீரை பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை கொடுத்து குடலில் உள்ள வாயுவை வெளியேற்றும். கபம், பித்தம் என அனைத்தையும் போக்கும்.

2. துளசி இலைகள் – 10

** மன இறுக்கம், நரம்பு கோளாறு, ஞாபக சக்தியின்மை போன்றவற்றை சரி செய்யும். ஆஸ்துமா, சளி, இருமல் தொண்டை பிரச்சனை, என பல பிரச்சினைகளை சரி செய்யும். வயிற்றில் உள்ள வாயு பிரச்சனை சரி செய்யும்.

இஞ்சியை துண்டுகளாக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். பின்பு இதனுடன் துளசி இலைகளை சேர்த்து ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். பின்னர் அதனுடன் கால் டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஒரு டம்ளரில் வடிகட்டிக் கொள்ளவும்.

இதை காலை மாலை என இரு வேளைகளிலும் குடித்து வர உங்களது வாயு தொல்லை இருந்த இடம் தெரியாமல் வெளியேறிவிடும். இதனுடன் உணவு பழக்கத்தையும் சிறிது நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகள், பால் பொருட்கள், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பட்டாணி போன்றவற்றை உணவில் அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.